|  
        தலைவர்களாயிருந்து 
        பகைவர்களையழித்தனர் என்பது வரலாறு.  
        இம்மூவரும் குறுப்பு நாட்டில் நிகழ்ந்த விசயமங்கலப் போரில்  
        வேட்டுவர்களை வென்றனரென்று இந்நூலின் மற்றொரு பாடல்  
        கூறுகின்றது.  
           குறுப்புநாட்டு 
        விசயமங்கலப் போர்பற்றிக் கூறும் ஏட்டுச்  
        சுவடியொன்றில் காணப்பெறும் வரலாற்றுச் செய்தியின் சுருக்கும்  
        வருமாறு:  
           குறுப்பு 
        நாட்டில் வேளாளர்களில் பெரும்படை திரட்டிவாழும்  
        பெருஞ்செல்வம் படைத்த அச்சுதராயன் என்பவனொருவனிருந்தான்.  
        அவனைப் போலவே வேட்டுவர்களின் பெரும்படை திரட்டிவாழும்  
        பெருஞ்செல்வம் படைத்த வேங்கடராயன் என்பவனொருவன்  
        இருந்தான். அவ்விருவருக்கும் நெடுநாளாக உட்பகையிருந்து வந்தது.  
        வேங்கடராயனுடைய படையாட்களிற் சிலர் அச்சுதராயனுக்கும் அவன்  
        மரபினோர்க்கும் அடிக்கடி பல தீங்குகளைச் செய்து வந்தனர்.  
        அச்சுதராயன் பல முறையாக எச்சரித்தும் வேங்கடராயன் படையாட்களின்  
        தொல்லை ஓயவில்லை. அதனால் அச்சுதராயன் மிகவும் கோபமுற்று  
        வேங்கடராயனுடைய படை வீரர்களை யடக்குமாறு தான் திரட்டியுள்ள  
        படைகளை வாரணவாசி, சீரங்கன், வடமலை என்பவர்களுடைய  
        தலைமையில் அனுப்பினான்.  
           அச்சுதராயன் 
        படை விசயமங்கலத்தையடையவும்  
        வேங்கடராயனுடைய படைகள் எதிர்த்தன. இரு திறத்தார்க்கும் சிலநாள்  
        போர் நிகழ்ந்தது. முடிவில் வாரணவாசியும் சீரங்கனும் வடமலையுமே  
        வேட்டுவப் படைகளை வென்று வேட்டுவ வீரர்களின் குறும்பையடக்கினர்.  
                     வாரணவாசி 
        சங்கப் புலவரை                       ஆதரித்தது 
          
      
         
          |  
             (70) 
               
               
               
               
               
           | 
          சங்கப் 
            பலகை வரும்புல வோர்தமைத் தான்றடுத்துக்  
            கங்கைக்குரியவன் காத்தவன் காண்கற்ப காலத்திலே  
            கொங்கிற் பொருள்தந்த பெம்மான்காங் கேயன்  
            மங்கைக்கு வாரண மன்றாடி வாழ்கொங்கு மண்டலமே.   | 
         
       
       |