(கு
- ரை) உலகுடை மன்றாடி வெள்ளோட்டில் வாழ்ந்தவன் என்பது
கீழ்வரும் வெண்பாவால் விளங்குவதாகும்.
"வேணா
வுடையார் வெள்ளோ டுலகுடையார்
ஆணூருச் சர்க்கரைமன் றாடியார் - பேணுபுகழ்
நாவேந்து பூந்துறைநண் ணாவுடையார் நால்வர்க்கும்
மூவேந்தர் சூட்டும் முடி." |
சோழர்கோன்
(75)
|
அம்புவிச்
சோழநள் ளாறும் வருமயி ராவதமும்
பண்புறு மைந்திகழ் வில்வமுஞ் சேர்வனம் பைதலக்கோன்
செம்பியன் காணவிநாசியி லிங்கர்தன் சேர்வை பட்டம்
வம்புறு கண்டனாஞ் சோழர்கோன் வாழ்கொங்கு மண்டலமே. |
(கு
- ரை) பைதலக்கோன் - பாலைவேளாளரில் பைதல குலத்துத்
தலைவன். அவிநாசிக் கோவில் திருப்பணி செய்தவன். இவனைப் பற்றிய
கல்வெட்டுகள் அவிநாசிக் கோவிலில் உள்ளன.
கண்ணப்ப
மன்றாடி
(76)
|
விண்ணப்ப
மன்றாடி சொக்கர்மீ னாட்சியும் மீனவற்குக்
கண்ணப்ப மன்றாடி நீயென் றதுமதிக் காங்கயற்கு
எண்ணப்ப மன்றாடி கண்ணைதன் கோத்திர னேழுகடல்
மண்ணப்ப மன்றாடி கார்விடுத்தான் கொங்கு மண்டலமே. |
பெருங்கருணாலயச்
செல்வி
(77)
|
புக்கொளி
யீசர் பெருங்கரு ணாலயப் பொற்கொடியாள்
ஒக்கவும் நாற்பத்தெண் ணாயிரம் பேர்க ளொருவர்குறை
சிக்களம் பாலின் முளைவாரி வள்ளஞ் சிரசில்வைத்து
மக்களைக் காக்க வருகுமம் மேகொங்கு மண்டலமே. |
|