கம்பருக்குத்
தண்டிகை தாங்கியது.
(83)
|
தண்டிகை
தாங்கியுங் காளாஞ்சி யேந்தித் தமிழ்செய்கம்பர்
அண்டையிற் பாதச்சம் மாளியுந் தூக்கி யடியும்பட்டி
வெண்டுவ கோத்திரன் தீத்தான்செவ் வந்தி விளங்குகங்கை
மண்டலங் கீர்த்தி தனைப்படைத் தான்கொங்கு மண்டலமே. |
(கு
- ரை)
கொங்கு நாட்டில் வெண்டுவ குலத்திற் பிறந்த தீத்தான்
என்பவன், கம்பர் குளித்தலையில் குலோத்துங்க சோழன் முன்னிலையில்
காவிரி கொங்குநாட்டு வேளாளர் வீட்டு விருந்தினர்கள் கைகழுவும்
எச்சில்நீர் என்று பாடித் தம்புகழை உயர்த்தியது காரணமாகக் கம்பருக்குத்
தண்டிகை தாங்கியும் காளாஞ்சி யேந்தியும் சம்மாளி தூக்கியும்
அடிமைப்பட்டும் மிகுந்த புகழை யடைந்தான்.
தண்டிகை
- சிவிகை, காளாஞ்சி - தாம்பூலகமலம்
சம்மாளி - தொடுதோல்.
"தவப்பேறு
கண்டுகுரு புத்திரனார் காவடியிலே சுமந்தார்
தண்டிகையில் வாணன் தனைச் சுமந்தோம்"
(மேழிவிளக்கம்
- 196)
"மிக்க புலவனுக்காய்
வேசிமனை மட்டாகத்
தக்க சிவிகைதனைத் தாங்குங்கை"
(திருக்கை
வழக்கம் - 9)
|
வெண்டுவ
குலக் காணியூர்கள் - வைகாவூர் நாடு, கொங்கூர்,
முகிலனூர், தாளக்கரை, சிங்காநல்லூர், காடாம்பாடி, கொல்லங் கோவில்
என்பன.
சுந்தரர்
பாடற்கடிமை செய்தது
(84)
|
அற்றது
கூடவுஞ் சுந்தரர் பாடற் கடிமையேன்றே
பெற்றவன் பெற்றவன் பெற்றவன் காண்பிர வேசிதன்னை
முத்தமிழ் வாணற்கு வேளூர ரப்பர்முன் பாய்க்கொடுத்து
வைத்தது மந்துவன் பெத்தான் வளர்கொங்கு மண்டலமே. |
|