(மேற்)
ஈசனுருகி
மடியினில் வைத்தென்று மிளையோயறிவுடையை
தேசுதருநம் வாணுதற்கண் மணிநீ சிறுவனோ பெரியை
வாச நறுமென் கனியுமொரு கனியோ மதுரமொழிவாயாற்
பேசவரிய மறை ஞானப்பிள்ளை பழநி யெனப் புகன்றார்.
(பழனித்தல
புராணம்)
|
இடும்பன்
23.
|
அலைகொண்ட
பாற்கடற் சற்ப சயனத் தரியயனுந்
தலைகொண்டி ரைஞ்சும் பதாம்புயத் தாருக்குச் சற்குருவாய்
நிலைகொண் டிருக்குஞ்செவ் வேளுக் கிடும்பன் முனீண்டசிவ
மலைகொண்டு வந்ததும் வைகாவூர் சூழ் கொங்குமண்டலமே.
|
(க-ரை)
மால்அயன் வணங்கும் பரமசிவத்துக்குச் சற்குருவான,
திருவாவினன்குடி முருகவேளுக்கு இடும்பன் சிவமலை கொண்டு வந்து
வைத்ததுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு
:- சூரபதுமன் முதலிய அசுரர்களுக்கு அஸ்திரசஸ்திர
வித்தைகளைக் கற்றுக் கொடுக்குங் குருவானவன் இடும்பாசுரன்
என்பான். முருகநாதனால் அசுரர்கள் நாசமானபின் நல்லறிவினால்
உருமாறிமனைவியோடு பொதியமலையில் முனிவரோடுமிருந்தனன்
அகத்தியரை அடைக்கலம் புகுந்தனன். வடக்கே உள்ள பூர்ச்ச
வனத்தையடைந்து அங்குள்ள சிவ சக்தியென்னும் இரண்டு சிகரங்களைக்
கொண்டு வருவாயானால் போகம் முத்தி இரண்டும் வருமெனக் கூறினர்.
அகத்தியர் உபதேசித்த திருவுருவத்தைத் தியானித்துக் கொண்டு இரண்டு
மலைகளையும் காவடி (தோட்சுமை) யிற்கொண்டுவந்தான்.
வழியில்வில்லம்புகளுடன் காவலனைப் போல் முருகவேள் தோன்றி
எதிர்த்தனர். வழி மயங்கித் திருவாவினன் குடியைச் சேர்ந்தான். பசி
தாகக்களைப்பால் தோட்சுமையை நிலத்தில் வைத்தான். தெளிந்து மறுபடி
தூக்கினான். அசையவில்லை. சந்தேகித்து மலைமேலேறிப்பார்த்தான்.
தண்டத்தைத் தாங்கிய ஓர் இளைஞனிருக்கக் கண்டான். அசுரனே! இம்
மலையை விட்டுச் செல் எனவே, குமரவேளின் மேற் பாய்ந்தான்.
இடும்பாசுரன் மாய்ந்தான். இடும்பி இரந்து வேண்டினள். கந்த
|