22

வேளின் கிருபையால் இடும்பன் எழுந்தான். குகப் பெருமானைத்
துதித்தனன். குற்றேவல் செய்து கொண்டிருக்க விதித்தனர். பின்பு அகத்திய
முனிவர் தண்டாயுதக் கடவுளைப் பூசித்து இடும்பனை நோக்கி நீ குழந்தைப்
பிரானுக்குக் குற்றேவல் செய்திருப்பையேல் முத்தியடைவாய் என்றருளினர்.
அம்மலைகளே சிவமலை சக்தி மலையாம்.

                      (மேற்)

அன்னதுணை மால்வரைக ளன்பினனி காவின்
மன்னிடு மிடும்பன்மணி நீல மொருதட்டும்
தன்னிகரில் மாமணியொர் தட்டின நிறைத்து
நன்னரி னிறுக்குமொரு நாயகனை நிகர்த்தான்

                                   (பழனிப்புராணம்)

                   மொக்கணீசுரர்

24.



ஏத்து சிவபத்தி யானொரு செட்டிமு னீசுரனைத்
தோய்த்து முழுகித் தொழவெழ வாங்கொரு சூழ்ச்சி கற்றோன்
பூத்த வனக்குடக் கோட்டூரில் மொக்கணி யைப் புதைக்க
வாய்த்த சிவலிங்க மானது வுங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) சிவதரிசன வழிபாடு செய்யும் ஒரு வணிகன் குடக்
கோட்டூருக்கு வந்து, ஆடை தோய்த்து ஸ்நானஞ் செய்து நியம முடித்து
வருதல் கண்ட யோசனையுள்ளமற்றொருவன், குதிரைக்குக் கொள்கட்டும்
பையை மணலில் நட்டுவைத்து (பூமாலை போட்டு அலங்கரித்து, இதோ
சிவலிங்கமென்றான்; அன்பன் வணங்கினான். அது சிவலிங்கப்
பெருமானாயிற்று. அக்குடக் கோட்டூரும் கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு :- சிவதரிசனஞ் செய்து பின் உணவு அருந்தும் நியமம்
பூண்ட ஒரு வணிககுல சிவநேசர் குடக்கோட்டூர்* வழி வந்தார்.


 * இது ஆறை நாட்டுள்ள ஓர் ஊர். அவிநாசியினின்று சத்திய மங்கலம்
   போகும் பாதையில் ஐந்தாவது மயிலிலுள்ள சேவூரினின்று வடமேற்கே
   செல்லும் கொடி வழியில் சுமார் மூன்று மயில் தூரத்தே அழிந்த
   ஆலயமாக இருக்கிறது ஊர் அழிந்து போயிற்று. கோட்டூர்ப்பள்ளம்
   என்ற    பெயர் மாத்திரம் சொல்ல இருக்கிறது. செட்டியார் நீராடிய
   ஓடை தாழை