241

                   (கழுத்தறுத்தது)

5



வில்லா லெறிந்து திருவானி நாதர் விமலர்பதங்
கல்லாலெறிந்து மலர்தெரிந்தோர் கங்கை வங்கிசமுங்
சொல்லாலெறிந்துமுன்வாளாற் கழுத்தைத் துணித்துவைத்தும்
வில்லா லெறிபவர் காண்பது காண்கொங்கு மண்டலமே

     (பி. ம்) 'திருவழிநாதர்,' 'விமலர்பக்கம்,' 'கொல்லாலெறிந்து,'             'மின்வாளால்,' 'வல்லாலெறிந்தவர்,' 'திருவாணி'
            'வங்கிசத்தோர்,' 'வைத்து'

                (நீலி பழிக்கஞ்சியது)

6



கன்னிகை யம்பிகை காமாட்சி தேவிதன் கச்சிதன்னில்
பன்னிய பாடல் வணிகருக் காகப் பழசையிலே
மின்னிய நீலி பழிக்காக மேன்மையே ளாளர்மிக்க
வன்னியில் மூழ்கிய காராளர் வாழ்கொங்கு மண்டலமே

     (பி..ம்) காமாட்சி யம்மைதன், பழகியிலே

7



தாவினில் கூடிய மூவரி லரசர் சபைதனிலே
சோபன மங்கையும் வந்துதித் தாள்சுய மம்மையப்பர்
சேவினி லேறி நல்லவர்க் காக்கங்கை சிறந்துவளர்
வாழ்வது கொண்டநற் காராளர் வாழ்கொங்கு மண்டலமே.

     (பி..ம்) மூவரில்ராசர், 'நலவாகக்கங்கை' 'சோவனமங்கை'

8



பாணன் பிணமுந் தனையே சுமந்திந்தப் பாருலகில்
காணென் பிணமென்று கார்த்தவன் காண்கற்ப காலத்திலே
ஊணன்றன் சோற்றைத் தேவா வமுர்தத்தை யூட்டுமென்று
வாணன் கவியைத் தவிர்த்தாள்வ துங்கொங்கு மண்டலமே

     (த ம்) பாணன் பிணங்கடனையே, காணன் பிணமென்று, யூணன்தன்
           சோற்றை, தவித்தான்வது, தேவாவ முதத்தை

                   (கீர்த்தி)

9



தண்டமிழ் பாடி வரும்புல வோர்சமு சியந்தீர
உண்டது கூழை யொழித்தனன் காண் துரும்போட்டிநின்று
கண்டனன் சொன்னது மெய்யென்று கூழைக் கரத்தில்வைத்து
மண்டலங் கீர்த்தி தனைப்படைத் தார்கொங்கு மண்டலமே

     (பி. ம்) சமுசயந்தீர்த், துரும் போட்டிநின்றான், கண்டனன்
            சோழனுமே யென்று, கீர்த்தி புகழ் படைத்தார்.