244

                    (ஓதாளகுலம்)

19.



தொண்ணூற் றோடாறு கீர்த்திக்கு மேல்சென்ற சூலிமுது
கெண்ணாமற் சோறு சுடப்படைத் தார்புகழ் காளி கற்பு
கண்ணாரக் கொங்கினில் ஓதாள கோத்திரக் காளிசெல்வி
மண்ணாளக் கன்ன குலமகளாங் கொங்கு மண்டலமே

                    (பி..ம்) "கீர்த்திக்கு மேல் கொண்டு", 'சீர்த்தியை' 'காழிகற்பு'
        'கண்ணகுலமகள்'

          (அந்துவகுலம்) (வயிற்றையும் பீறிநாவரிந்தது)

20.



சுந்தரன் பாடல் தமிழ்தனைக் கேட்டவர் தூது சென்று
புந்தியி லெண்ணி மகிழ்ந்தவர் கூறவும் பொய்யென்றகை
சந்தேகந்தீர வயிற்றையும் பீறித்தன் நாவரிந்து
வந்தது மந்துவ கோத்திரம் வாழ்கொங்கு மண்டலமே

     (பி..ம்) "புந்தியில் வேசி மகிழ்ச்சியுங்கூறவும்", 'பொய் யென்றதை'
           'கோத்திரன் வாழ்', கோத்திரன் பேத்தான்'.

                     (மணியகுலம்)

21.



கொற்றூர் வணிகர் மணிய குலேந்திரன் குமாரமுத்து
பெற்றார் கலிங்கந்தேவேந்திரன் முன்தன் பாசையிட்டு
முத்தான முத்து முதிரேறுமுத்து முதிந்த முத்து
வைத்தான் பிடாரன் பிச்சையிட் டான்கொங்கு மண்டலமே

        (பி..ம்) 'பற்றார்கலிங்கம்'; 'பாஷையிட்டு' 'வைத்தான் கனகமும்'

                (பரதகுலம்) (பரதகுலாதிபன்)

22.



கரைதெரி வாணி மலைமகள் கேள்வன் கனகசபை
உரைதெரி பாலை வனந்தனி லேயெதி ரோடிவந்து
பரதகுலாதிபன் நல்லான் சிறுவன்தன் பாரிதன்னை
வரைதெரியேழுங் குலம்வகுத் தான்கொங்கு மண்டலமே

           (பி..ம்) 'யேழுமகவளித்தான்' 'யேழும் குலம்வகுத்தான்'

                     (கூரைகுலம்)

23.



காரையுந் தேவர் நரகா வசுரரைக் காவல்சென்று
போரை யிராவினிற் போர்முடித் தேபொழு தேதுதிக்க
கூரை குலாதிபன் கூரையுந் தந்து குழந்தை முத்தன்
வாரியுந் தேவருக் கெண்ணெயிட் டான்கொங்கு மண்டலமே

        (பி..ம்) 'நாகாவசுரன்றன்' 'பொழுதேயுதிக்க' 'போர்முடிந்தே,
        'வாரையுந்தேவருந்' 'வாரையுந்தேவர்கட்!'