(கணவாளகுலம்)
24.
|
முழுவார்
வணிகற்கு நீலி பழிக்கு முதல்வனென்று
கொழுவால் கழுத்தை ஒடித்தவன் காணெள்ளுக் கோர் பணிப்பில்
கீழை கணவாள கோத்திர நல்லையன் கீர்த்தியிலே
வழவா நெருப்பினில் வீழ்வான் திருக்கொங்கு மண்டலமே |
(பி..ம்)
'முளு, கொளு, வளு"; 'முதல்வனென்றே' 'எள்ளுக்கோர்
மணியில்';
மூன்றாம்அடி 'கணவாள கோத்திரம் நல்லான்
சிறுவன்றன்
கந்தன்மைந்தன்" என்பது; "கிளைகணவாள"
(எண்ணகுலம்)
(எண்ண
குலாதிபன்)
25.
|
விண்ணவர்
தேவர் நரகர் வசுரன் விகுத்தமறப்
பண்ணவ ராமர் செய்போர் முடித்தோன்பணை மங்கைப்பதி
யெண்ண குலாதிப னல்லான் செல்லப்ப னிரவிமுன்னே
வண்ணவன் சேலையு மெண்ணெய்தந் தான்கொங்கு மண்டலமே |
(பி..ம்)
நரகாசுரன்றன்;
'போர்முடித்தார் பதிஎண்ணை மங்கை'
'கொல்லப்
பிறவிமுன்னே,' 'வண்ணமுஞ்சேலை"
(ஒழுக்கர்
குலம்)
26.
|
அழற்கண்ணர்
தேவர் நரகா வசுரன்றே வாவமிர்தம்
முழக்கமும் வீரம் குலைந்ததென் றேநல் மூச்செறிந்து
ஒழுக்கர் குலாதிபன் வேலன் சிறுவன் உலகுதனில்
வழக்கமுந் தேவர்க் கன்னமிட் டான்கொங்கு மண்டலமே |
(பி..ம்)
'தேவாவமுர்தம்', 'வீரம்குலைந்துதென்றே', 'தேவர்கட்
கன்னமிட்டாள்'
'தேவா வமுதமிட்டான்' தலைப்பு 'ஒளுக்கர்
குலம்'
(எருமை
குலம்)
27.
|
குறுமுனி
வேள்விப் பகடென ராட்சதன் கோரமிக
உறுமிய பூமியிற் பாய்ந்திடுங் கொம்பை உதிரவெட்டி
எருமைதன் கோத்திரன் மருதா சலமுத் திரவலற்கு
வருமைத் துயர மிடர்தவித் தான்கொங்கு மண்டலமே |
(பி..ம்)
'குருமுனி வேளப்பகடென', 'பாய்ந்திடுங்கொம்பை' 'மதுராசலமுத்து',
"எருமை குலேந்திரன்"
|