28.
|
கொங்கார்
நிதியும் புகழ்கிருஷ்ண ராயர் கொலுச்சபையில்
சிங்கார மாகிய வேளான் மகளெனச் சென்றுவளர்
சங்கரன் கச்சியில் வாழ்திறக் குத்தித் தள்ளிவைத்தே
மங்காத கீர்த்தி புகழ்படைத் தான்கொங்கு மண்டலமே |
(பி..ம்)
"புகழ்கிட்ண" "சங்காரக் கச்சியில்" "சங்கார் கச்சியில்"
"வேளான்"
'வாழ்ந்திட'
(வாரணவாசி
குலம்)
29.
|
ஆணெவ
ரென்று பனிரெண்டு பட்டமு மாகுந்திக்கில்
வேணுமென்றுச்சித ராயர்சிம் மாசன வேளாளர்கோன்
காணவு மேவுந் திருமலை நல்லான் கனகரற்னம்
வாரண வாசிமெய் மன்றாடி வாழ்கொங்கு மண்டலமே |
(பி..ம்)
'ஆணவரென்று', கனகரத்தினம், 'பட்டமாகுந்திக்கு'
வேணுமென்றச்சுயராயர்,'
வேணுமென்றுச்சயராயர்'
(திருவமட்டி
குலம்) - (திருவம்படி குலம்)
30.
|
வேளுங்
கயலும் திருவும் பிறையும் விதவிதமா
யாளுங் கமல நதியுங் காவேரியு மன்றுசிவன்
யேழுங் குலமும் திருவம் படியிவ னேழலகும்
வாழுங் கரசையில் நல்லவன் வாழ்கொங்கு மண்டலமே |
(பி..ம்)
'விதவிதமும்' 'திருவம்படிவமே மேழுலகும்' "கறைசியில்"
'கரசியில்'
"வேழம் ஆழம்"
|