25

கொல்லக்குட வரைப்
பூதம் புணர்த்த புதிதியல் பாவை -
                              (நற்றிணை)

பெரும் பூட்பொறையன் போமுதிர் கொல்லிக்
கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய
நல்லியற் பாவை -
                             (குறுந்தொகை)


26.



முத்தீட்டு வாரிதி சூழுல கத்தினின் மோகமுறத்
தொத்தீட்டு தேவர்க்கு மற்றுமுள் ளோர்க்குஞ் சுவைமதுரக்
கொத்தீட் டியபுதுப் பூத்தேனு முறுங் குறிஞ்சி யின்றேன்
வைத்தீட் டியகொல்லி மாமலை யுங்கொங்க மண்டலமே.

     (க-ரை) தேவர் முதலிய மற்றெல்லோரும் ஆசை கொள்ளத் தக்க
பூத்தேன் சொரிந்தள்ள கொல்லி மலையுங் கொங்கு மண்டலம் என்பதாம்.

                      (மேற்)

கொல்லி மலைத் தேன்சொரியுங் கொற்றவா

                                                          (கம்பர் தனிப்பாட்டு)


உயர்சா லுயர்வரைக் கொல்லிக் குடவயி
னகவிலைக் காந்த ளலங் குகுவலப் பாய்ந்து
பறவை யழைத்த பல்க ணிறாஅற்
றேனுடைய நெடுவரை
                       (நற்றிணை)

                       எறிபத்தர்

27.



நதிசூடும் வேணிக் கருவூர்ப் பசுபதி நம்பருக்குப்
புதுமாலை கட்டுஞ் சிவகாமி யாண்டவன் போந்தெருவின்
மிதமீறிப் பூவினைச் சிந்துகை யான்விறன் மீறவெட்டி
மதயானை யைக்கொன் றெழுப்பிய துங்கொங்கு மண்டலமே.