26

     (க-ரை) கரூர்ப் பசுபதி ஈசுரருக்காக மாலை கட்டுந்திருத்
தொண்டினைக் கொண்ட சிவாகாமி யாண்டார் பூக்கூடையைப் பிடுங்கி
எறிந்த யானையைக் கொன்று பின்பு எழுப்பியதுங் கொங்கு மண்டலம்
என்பதாம்.

     வரலாறு :- கரூரில் எறிபத்தர் என்பவர் அடியார்களுக்கு
ஆபத்து வந்தால் அதற்குக் காரணமாக இருந்தவர்களை மழுவினால்
வெட்டுகின்ற கோட்பாடுடையவர். சிவகாமியாண்டார் என்பவர் வழக்கம்
போலப் பூக்கள் எடுத்துக்கொண்டு தெரு வழியாக வந்தார். அந்நாட்டை
ஆளும் புகழ்ச் சோழனாரது பட்டவர்த்தன யானை மதவெறியால் அப்பூக்
கூடையைப் பிடுங்கிச் சிதறியது. இதனைக் கண்ட எறிபத்தர் அந்த
யானையையும் பாகர்களை வரையுங் கொன்று நின்றார். இவரது அன்பின்
திறத்தைக் கண்ட புகழ்ச்சோழர், சிவனடியாருக்குத் தீங்கு செய்த
யானையை வளர்த்த என்னைக் கொல்வது அவசியமென்று தன் வாளை
அவர் கையிற் கொடுத்தார். மிக்க மெய்ப்பத்தியுள்ள இச்சேவகருக்குத்
தீங்கு இழைத்தோமே என்று எறிபத்தர், தன் கழுத்தை அவ் வாளால்
அறுத்துக் கொள்ளத் தொடங்கினார். புகழ்ச் சோழனார் பயந்து நடுங்கி
கையையும் வாளையும் பிடித்துக் கொண்டார். அளவிறந்த அன்பினால்
அவ்விருவருக்கும் உண்டான துக்கத்தை நீக்கும் பொருட்டு ஆகாய
வாக்கின்படி இறந்த யானையும் பாகர்களும் உயிர்த்தெழச்
சிவபெருமானருளினர்.

                         (மேற்)

திருமருவு கசவூரா நிலையார் சாத்துஞ் சிவகாமி  யார்மலரைச்
                               சிந்தயானை யரனெறியோ
ரெறிபத்தர் பாகரோடு மறவெறிய வென்னுயிரு மகற்றீரென்று
                                          புரவலனார்
கொடுத்தபடை யன்பால் வாங்கிப் புரிந்தரிவாள் புகவெழுந்த
                                      புனித வாக்காற்,
கரியினுடன் விழுந்தாகு மெழுந்தார்தாமுங் கணநாத ரதுகா
                                 வல் கைக்கொண்டாரே

(திருத்தொண்டர் புராண சாரம்)

மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார்.

28.



நிலவுல கத்திற் பலகலை தேர்ந்த நிபுணருளே
புலவர் திருவள் ளுவரென நேயம் பொருந்தவுரை
குலவு மதுரைத் தமிழா சிரியர் செங் குன்றூர் கிழார்
வலிமை யுறவரு செங்கோடை யுங்கொங்கு மண்டலமே.