(க-ரை)
பூவுலகத்திற் பல கலை ஞானங்களில் சிறந்த புலவர்
திருவள்ளுவர் என்று வெண்பாக் கூறிய மதுரைத் தமிழாசிரியர்
செங்குன்றூர்க் கிழாருங் கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு
:- திருவள்ளுவர். திருக்குறள் என்னும் ஒப்பில்லாத
நூலைப்பாடி. அரங்கேற்றுதற்கு மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரிடம் கொண்டு
போயினர். அவர்கள் கல்விச் செருக்கால் இவரை மதித்து இருப்புக்
கொடுக்கவில்லை. இச்சுவடிக்காவது இடங் கொடுத்தல் வேண்டுமென
வள்ளுவர் கேட்டனர் ஒப்பினார்கள் குறள் நூலை வைத்தனர். தெய்விகமான
சங்கப்பலகை, அச்சுவடி யளவாகச் சுருங்கி விட்டது. சங்கப் புலவர்கள்
இறங்க வேண்டி நேர்ந்தது. வள்ளுவர் பின்பு வாசித்தனர். அதன் அருமை
கண்டு வியந்து அச்சங்கப்புலவர்கள் நாற்பத்தொன்பதின்மரும், ஆகாய
வாணியும் ஒளவை, இடைக்காடர் ஆகிய ஐம்பத்தொருவரும் தனித்தனி
ஒவ்வொரு வெண்பாக் கூறினர். அவர்களின்ஒருவரான மதுரைத் தமிழாசிரியர்
செங்குன்றூர்க் கிழாரும் ஒரு வெண்பாக் கூறினர் இவைகளெல்லாஞ்
சேர்ந்தது திருவள்ளுவமாலை. இவர்களுள்ளே "புலவர் திருவள்ளவரன்றிப்
பூமேல்" என்னும் வெண்பாக் கூறிய செங்குன்றூர்க் கிழார் பிறந்தவூர்
செங்குன்றூரான திருச்செங்கோடு.
(மேற்)
புலவர்
திருவள் ளுவரன்றிப் பூமேற்
சிலவர் புலவரெனப் செப்பல் - நிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயராகு மற்றுங்
கறங் கிருண்மா லைக்கும் பெயர்
(திருவள்ளுவமாலை)
|
கனகசபையாக்கப்
பொன் கொடுத்தது
29.
|
பற்றறுத்
தாளும் பரமனா னந்தம் பயினடஞ்செய்
சிற்றம் பலத்தைப்பொ னம்பல மாகச் செயச்செலும்பொன்
முற்றிலுந் தன்கைத் தேவிளை வாவதை மொய்ம் பிறையுண்
மற்றும் புகழக் கொடுத்ததன் றோகொங்கு மண்டலமே. |
(க-ரை)
பரமசிவமானவர் ஆநந்த தாண்டவம் புரிந்தருளும்
சிதம்பரததைக் கனகசபையாகச் செய்ய வேண்டிய தங்கம் அவ்
|