ஆட்கொண்டான்
32.
|
துன்னு
மறைப்பொரு ளெல்லாம் பொதிந்து சுவை முதிர்ந்து
பன்னும் புகழ்பெறைந் தாம்வேத மென்னுமப் பாரதத்தைத்
தென்னன் மொழியிற் சொலச்செய்து கன்னடர்ச் செற்றதமிழ்
மன்னன் வலியனாட் கொண்டான் முனோர் கொங்கு மண்டலமே.
|
(க-ரை)
வேதப்பொருள்க ளுள்ளமைந்தமையால் ஐந்தாம் வேதமென
பாராட்டுகின்ற பாரதக் கதையைத் தமிழில் வில்லிப் புத்தூராரைக் கொண்டு
பாடச் செய்த ஆட்கொண்டானது முன்னோருங் கொங்கு மண்டலம்
என்பதாம்.
(வரலாறு)
பாரதத்தைத் தமிழில் பாடும்படி செய்வித்த ஆட்
கொண்டான் என்பவன் வக்கபாகையில் வசித்தவனென்று சொல்லப்
பட்டாலும் அவன் மரபினர் கொங்கர்களே என்பதை மறுக்க முடியாது.
அப்பாரதத்தில் "கொங்கர் பிரா னாட்கொண்டான்" எனக் கூறப்படுதல்
அறிக. இந்த ஆட்கொண்டானின் முன்னோர்கள் சோழனது
சேனாதிபதியாகச் சென்று அரசனால் காணிபூமிகள் கொண்டு
வக்கபாகையில், தங்கி இருத்தல் வேண்டும். சோழியர் எந்நாட்டில்
வசித்தாலும், தொண்டை மண்டலத்தார் எந்நாட்டில் வசித்தாலும் சோழியர்
என்றும் தொண்டை மண்டலத்தார் என்றும் வழங்குதல் போலத்
தொழில்நோக்கி எந்நாட்டிலிருக்கினும் கொங்கரைக் "கொங்கர்" என்றே
வழங்குவர். ஆட்கொண்டான் என்னும் உபகாரி கொங்கன் என்பதை,
வில்லிபுத்தூரர் மகனார் வரந்தருவார் பாடிய பாரதச் சிறப்புப் பாயிரத்தில்.
எங்குமிவ
னிசைபரப்பி வருநாளில் யாமுரைத்த விந்த நாட்டிற்
கொங்கர்குல வரபதியாட் கொண்டானென் றொருவண்மைக்
குரிசி தோன்றி
வெங்கலியின் மூழ்காமற் கருநடப்பேர் வெள்ளத்து விழாம
னான்காஞ் சங்கமென முச்சங்கத் தண்டமிழ்நூல் கலங்காமற்
றவலகண்டானே
|
|