ஆற்றியவிச்
செல்வத்தா லளகையைவென் றிருங்கவினா
லமர ரூரை
மாற்றியபொற் றடமதல்சூழ் வக்கபா கையினறத்தின்
வடிவம் போலத்
தோற்றியவக் கொங்கர்பிரான் சூழ்தமிழா னாட்கொண்டான்
சுற்றத்தோடு
போற்றியவிப் புவிமுழுதுந் தன்றிருப்பேர் மொழிகொண்டே
புரந்தா னம்மா.
|
இந்த
ஆட்கொண்டானை இரட்டையர் பாடியது.
சாணர்க்கு
முன்னிற்கு மாட்கொண்ட நாயகன்
றமிழ்க்கொங்கர்கோன்
பாணுற்ற வரிவண்டு சேர்வக்கை நகராதி பக்கத்திலே
யூணுக்குவாரா திருப்பாய்வி ருப்பாகி யுயர்வானிலே
வீணுக்கு நின்னாக மெலிகின்ற தெவ்வாறு வேண்டிங்களே.
|
கரிகாலன்
33.
|
நீரமை
காவிரி நாட்டினை யாண்ட நிருபரினற்
பேருறு வான்கரி காலன் கரந்து பிழைத்ததன்றி
ஏருறு சிங்கா தனமேறக் கையா லெடுத்துமத
வாரணங் கண்டு கொடுபோன துங்கொங்கு மண்டலமே. |
(க-ரை)
சோழ மண்டலத்தை ஆண்ட வேந்தருள்ளே திறமை
வாய்ந்த கரிகாற்சோழன் தன் உயிர் பிழைத்தல் காரணமாக மாறு
வேடமாக இருந்து பிழைத்ததும், இவனைச் சிங்காதன மேற்ற யானை
எடுத்துப் போனதுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு
: உறையூரில் அரசுபுரிந்த உருவப்பஃறேர் இளஞ்சேட்
சென்னி என்னுஞ் சோழன், அழுந்தூர் வேள்மகளை மணந்தான்.
கருப்பமுற்றுப் பிரசூதி வேதனைப்படுங்காலத்தில், இன்னும் ஒரு
முகூர்த்தத்தின் பின்பிறந்த பிள்ளை சக்கிரவர்த்தியாவனெனக் கேட்ட
அரசி, தன்னைக் தலைகீழாகக் கட்டும்படி, கூறி நல்லோரை வந்தவுடன்
இறங்கி ஆண்மகவை ஈன்றனள். இளம்பருவத்தே குமரனின் பிதா உயிர்
துறந்தனன். உள்நாட்டுக் குழப்பமும், வெளிநாட்டுச் சண்டையுமான
இருத்தலின் சிங்காசன மேறக் கூடவில்லை, பிழைப்பதே அரிதாக இருந்தது.
மாறு
|