37

                    கரூர்ச்சித்தர்

34.



வாய்த்தம் பலவெச்சி லாலட்ட பந்தன மாண்புறமீன்
காய்த்து மரஞ்சொரி யச்செய்து பத்தி கனிந்து செந்தேன்
தோய்த்த திருவிசைப் பாப்பா டொருசித்தர் தோன்றிவர
வாய்த்த கருவூர்ப் பதிசேர்வ துங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) தம்பல எச்சிலால் அட்டபந்தனம் இறுகவும், மரம் மீன்
காய்த்துச் சொரியவும், பத்தி கனிந்த திருவிசைப்பா ஓதி யருளிய (கரூர்ச்)
சித்தர் பிறத்தற்கு வாய்ப்புற்ற கருவூர் சேர்வதுவுங் கொங்கு மண்டலம்
என்பதாம்.

     வரலாறு - கருவூரில் வேதியர் குலத்துதித்து உலகாயுதம் முதலிய
சமய உண்மைகளை நன்காராய்ந்து சைவ சமயமே நற்சமயமென்று தேறி
ஒழுகுவாராயினர். வேத ஆகம சாரங்களான திருவிசைப்பாக்களைப்
பல தலங்களுக்குச் சென்று ஓதியருளினர். சிவயோகங் கைவந்த சித்தர்.
மாதவஞ் செய்தாலும் மாதர்பாலிருந்தாலுந் தாமரையிலை நீர் போலிருப்பவர்.
பாண்டி நாட்டுத் திருக்குருகூரை அடைந்தார். அங்கு எழுந்தருளியுள்ள
திருமால் அடியார் கனவிற்தோன்றி, சித்தரை எதிர்சென் றழைத்த
வந்துபசரியுங்களெனக் கட்டளையிட்டார். முன்னீசரை வணங்கி மது
வேண்டுமெனக் - காளி கொணர்ந்தாள். வன்னிமரத்தை மீன் மழை
பொழியச் செய்தார். பொதிகை சேர்ந்து அகத்தியரைத் தரிசித்தார்.
தஞ்சாவூர்ப் பெரிய கோயிலே சிவபதிட்டைக்கு மருந்து இளகி இறுகாது
அரசன் வருந்தினான். கருவூர்ச் சித்தர் வந்தாலல்லது காரியசித்தி
பெறாதென ஆகாய வாக்கு எழுந்தது. உருமாறி அங்கிருந்த போகநாதர்
ஒரு காக்கையின் காலிற் சீட்டெழுதிக் கட்டினர். அது கண்ட கரூர்ச்சித்தர்
வந்து ஆலயத்துட் புகுந்து தம்பல எச்சிலை உமிழ்ந்து பந்தனஞ் செய்தனர்.
பல்லாயிரம் பேருக்குத் தயாரான அன்னத்தைத் தானே உண்டு அத்தனை
பேர்கள் வயறும் நிரம்பும்படி செய்தனர். அரங்க நாதரை அழைத்து
விலையேறப் பெற்ற மாணிக்க மாலையை வாங்கி அவளுக்குக் கொடுத்தார்.
கோயிலார் தாசியைப்பிடித்துக் கொள்ள அரங்கநாதர் தான் கொடுத்ததாசே
சான்று கூறினர். மது ஊன் அருந்துகிறாரெனக் கரூர்ப் பார்ப்பனர் அரசன்
முன்கூறினர்.