சித்தர் வசிக்கு
மிடத்தைப் பார்க்க அங்குப் பெரியோர்களது
உபகரணங்களிருந்தன. சித்தர் அறிவித்தவாறு விப்பிர அகரத்தைப்
பார்க்க, மதுக்குடங்களும் புலால்களும் நிறைந்திருக்கக் கண்டார்கள்.
இவ்வாறு பல சித்துகள் காட்டினர். இவரருமை யறியாத பார்ப்பனர்
இவரைப் புடைக்கக் கருதி ஆம்பிரா நதிக்கரையிலிருந்து துரத்தினார்கள்.
ஓட்டமாக ஓடி ஆநிலையாலயத்துட் புகுந்து சிவபிரானைத் தழுவிக்
கொண்டார். அரும்பெரும்சோதி தன்னுட் கரந்து கொண்டது.
(மேற்)
வாகுறு சோழன்
மனமகிழ்ந் திறைஞ்ச வளமிகு மாவுடை
யாளோ
டேர்கெழு சிவலிங் கம்புணர்ந் தருள வெழில்பெறு மட்டபந்
தனநற்
பாகிலை சுவைத்த பசையினை யுமிழ்ந்து பண்பொடு
மிருகிடப் பயிற்றி
மோகமோ டரச னாக்கிய வமுத முழுதுமுண்
டுயிர்தொறு நிரப்பி
(திருவாவடுதுறைப்
புராணம்)
|
என்றவர்
கவளத் துட்க வேய்ந்து சிற்றிலைக டுற்று
நின்றதோர் வன்னி தன்னை நீதரு கென்ற போழ்தின்
மின்றரு வானம் பூத்த மீனில மெய்த லேய்ப்ப
வன்றனித் ததுயர் மேலோர் கருத்தினை யளவு காண்பார்
(கரூர்ப்புராணம்)
|
கஞ்சமலைச்
சித்தர்
35.
|
பஞ்சமுகத்தி
லுதித்திடு மாகம பரகமெலாஞ்
செஞ்சொற் றிருமந் திருமுரை மூலர் திருமரபிற்
கஞ்ச மலைச்சித்தர் வாழ்வு மிரதங் கரணிவளர்
மஞ்சு திகழ் கஞ்ச மாமலை யுங்கொங்கு மண்டலமே.
|
(க-ரை)
சதாசிவ மூர்த்தியின் றிருமுகத்தினின்று தோன்றிய
ஆகமங்களின் ரசமாகத் திருமந்திர மருளிய திருமூல நாயனார்
பரம்பரையான கஞ்சமலைச் சித்தர் வாழ்வதும் ரசம் முக்கரணிகள்
வளர்துவமான கஞ்சமலையுங் கொங்குமண்டலம் என்பதாம்.
|