(க-ரை)
பொலிவு மிகுந்த "கொங்குநாடு செழித்தால் இப்புவியிலுள்ள
எந்தநாடும் நல்ல பலனைப் பெற்றுச் சுகம் அடையு" மென்று சொல்கின்ற
பழமொழிக்கு இணங்க மாடுகன்றுகள் விருத்தி கொண்டது கொங்குமண்டலம்
என்பதாம்.
(மேற்)
"கொங்கு
மலிந்தால் எங்கும் மலியும்" |
(ஒரு
பழமொழி)
எல்லை
2.
|
மதிற்கரை
கீட்டிசை தெற்குப் பழநி மதிகுடக்குக்
கதித்துள வெள்ளி மலைபெரும் பாலை கவின்வடக்கு
விதித்துள நான்கெல்லை சூழ வளமுற்று மேவிவிண்ணோர்
மதித்திட வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு மண்டலமே, |
(க-ரை)
கிழக்கில் மதிற் (கோட்டைக்) கரையும், தெற்கில் பழநியும்,
மேற்கில் வெள்ளியங்கிரியும், வடக்கில் பெரும்பாலையும் நான்கு திக்கின்
எல்லையாகக் கொண்டு வளப்பம் பொருந்தித் தேவர்களும் தங்கியுள்ளது
கொங்கு மண்டலமென்பதாம்.
*வடக்குப்
பெரும்பாலை வைகாவூர் தெற்குக்
குடக்குப் பொறுப்புவெள்ளிக் குன்று - கிடக்கும்
களித்தண் டலைமேவு காவிரிசூழ் நாட்டுக்
குளிர்தண் டலையளவு கொங்கு. |
நாடு
- இணை நாடு
3.
|
நாலா
கலையலை வாரிதி மாந்தி ஞயம்பொருந்தத்
தோலா மொழிக டிகழ்நா வலர்கள் சுகம்பொருந்த
நாலாறு நாடு மிணைநாட்டுங் குஞ்சரி நாதனுடன்
மாலால கண்ட ரமர்பதி சேர்கொங்கு மண்டலமே
|
(க-ரை)
பலகலைக் கடலையுண்டு சுவையுடைத்தாய்த் தோல்வி
பெறாது பேசவல்ல நாவலர்கள் எந்நாளும் இன்பம் நிறைந்து வாழும்
இருபத்திநான்கு நாடுகளிலும் அவற்றைச் சூழ்ந்த இணைநாடுகளிலும்
முருகவேள் கோயிலும், திருமால் கோயிலும், சிவாலயங்களும்
நிறைந்துள்ளது, கொங்கு மண்டலம் என்பதாம்.
* வடக்குத்தலை மலையாம்
என்று பாட பேதமுண்டு வடகொங்குக்குப்
பெரும்பாலையும், மேல் கொங்குக்குத் தலைமலையும் வடக்கெல்லையாக
இருத்தலின் இவ்வித பாடபேதம் ஏற்பட்டிருக்கிறது.
|