40

                         (மேற்)

தானான சிவகிரியிற் றண்டாயுதபாணி தாதாவைப் பூசித்தோர்
                                     பிரமனிந்திரன்
தேனான போகருட னிவர்கள் மூவர் தெளிவாக முன்யுகத்தில்
                                        மூவரப்பா
கோனான கலியுக மிருநூற்றைந்தில் கொற்றவனே புலிப்பாணி
                                     பூசித்தேன்பார்
மானான அட்டசித்தி கோடாசத்தி மைந்தனே சித்தரிட
                                      நடனந்தானே

(புலிப்பாணி பாடல் திரட்டு)

     பழனி ஆண்டவர் சந்நிதி முன்பு போகர் ஒடுக்க மடம் என்றும்
மலையடிவாரத்தே புலிப்பாணிமடம் என்றும் இருக்கின்றன.

                     கொங்கணச் சித்தர்

37.




தோற்றிய செம்பு தராவீயம் பித்தளை சூழ்பச்சிலைச்
சாற்றுட னாக ரசங்கத் தகமிட்டுத் தந்திரமாய்
தேற்றுந் தவம்பெற்ற கொங்கணச் சித்தர்முன்
                      செம்பொன்செய்து
மாற்றுரை கண்டது பொன்னூதி யூர்கொங்கு மண்டலமே.

     (க-ரை) செம்பு முதலிய லோகங்களுடன் பச்சிலைச்சாறு, ரச கந்தக
முதலியன சேர்த்துப் பொன் செய்து மாற்றுக்காணும் கொங்கணச்சித்தர்
வசிக்கும் ஊதியூர் மலையுங் கொங்குமண்டலம் என்பதாம்.

     வரலாறு : மகத நாட்டரசனுக்குப் பிறந்த ஆண்மகவைச் சுராநந்த
முனிவர் நோக்கி நீடித்து வாழ்வாயென ஆசி கூறிக் காப்பிட்டனர். சகல
கலைகளுக்கற்ற அக்குமரன் தேச சஞ்சாரத்தால் ஞானத்தைப் பெறலாமென்ற
கருத்தை வேந்தனுக்கறி வித்தனன். பரிசனங்களுடன் வழியனுப்பினன். பல
பதிகளிற்றங்கிப்பின் ஆதிபுரியை அடைந்தனன். அங்குச் சுராநந்த முனிவர்
தோன்றி முக்கால அடைவு உணர்வித்துச் சென்றனர். கொங்கண ராசனும்
மேல்நாட்டு யாத்திரையாகப் புறப்பட்டுத் தென்கரை நாட்டில்
கொங்கணேசரைத் தரிசித்து வணங்கியிருந்தனன். ஒரு நாள் புன்னாகமர
நிழலிலே சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து