41

உள்ளமுருகிப் பூசிக்குங்காலத்தே இறைவன் குருவடிவாகத் தோன்றி அட்ட
சித்தியையும் சிவயோகத்தையுந் தெளிவுற உபதேசித்தனர். கொங்கணர்
தாமிரம் முதலிய லோகங்களைப் பொன்செய்து விரும்பினோர்க்குக்
கொடுத்தனர். தன்மீது எச்சமிட்டு ஆகாயத்திற் சென்ற கொக்கை விழித்துப்
பார்த்துச் சாம்பராகச் செய்தனர். கோரக்கநாதர் சினேகமும் கொண்டனர்.

                  (மேற்)

பாத பத்திரம் பற்பல மூலிகொண்
டூது நற்புட முள்வலி யெய்திய
சூத வேதைசிந் தூரத் துகளினால்
வாத குத்தி கனகம் வழங்கினான்.
                         
(அப்பிரமேய தலபுராணம்)

     இது தென்கரை நாட்டுள்ளது. ஊதியூர்ச் சிவபெருமானுக்குக்
கொங்கணேசர் என்று திருநாமம். இங்கு அநுக்கிரகம் பெற்று வசித்தலால்
இறைவன் திருநாமமான "கொங்கணர்" என்று பெயராயிற்று போலும்.
இராசிபுர நாட்டினும் கொங்கணச் சித்தர் மலை, கொங்கணச் சித்தர்
ஆலயமுமிருக்கின்றன. கொங்கணச் சித்தர் செய்ததாகப் பஞ்சபட்சி,
வாதம், வைத்தியர் முதலிய நூல்கள் வழங்குகின்றன.

                      (மேற்)

'ஐங்கரனை யெத்தமன' மென்னும் திருப்புகழில்,
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள் கொண்டு
உடலற்ற பொருள் அருள்வாயே,
குஞ்சர முகற்கிளைய கந்தனென வெற்றி
பெறு கொங்கணகிரிக்குள்வளர் பெருமாளே.
என வந்துள்ளது.

                      இடைஞானி

38.



ஒருவிதையைத்தட்டு மாயர் மதலை யுவமையிலா
அரியஞானங் கொளச் சென்னியிற் செந்நீ ரருவியெனச்
சொரியநின் றன்னான் றனையாண்ட முக்கட் சுயம்பு வென்று
மருவி வளர்தென் கரைநாடு சூழ்கொங்கு மண்டலமே.