46

                (மேற்)

ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்பசி யுழவாப்
பாஅலின் மையிற் றோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி
நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென்
மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண
வென்னிலை யறிந்தனை யாயி னின்னிலைத்
தொடுத்துங் கொள்ளா தமையவெ னடுக்கிய
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணார் முழவின் வயிரியர்
இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயோ

                                 (புறநானூறு)


குமரன் முன்னவன் முதலினர்க் கொளுமதஞ் சைவ
சமய மென்றல்போற் கொழுமமே வரதரா சபுரம்
அமையும் ருத்திரா பாளய மெனப்பல வடுத்துக்
குமண நன்னக யெனுமொரு பெயரினாற் குலவும்

                                 (குமணசரித்திரம்)

     கோயமுத்தூர் ஜில்லா உடுமலைப் பேட்டைத் தாலுக்காவில்
கொழுமம் என்னும் ஊரில் குமணன் இருந்தது. குமண நகர் கொழும நகர்
எனவும் முதிரைமலை குதிரைமலை எனவும் மருவி வழங்குகிறதென்றும்,
குதிரை ஆறு என ஒரு ஆறு ஓடுகிறதென்றும் சரித்திரக்காரர் கருத்து.

                    அதிகமான்

42.



சாதலை நீக்கு மருநெல்லி தன்னைத் தமிழ்சொ லௌவைக்
காதர வோடு கொடுத்தவன் கன்னலை யங்குநின்று
மேதினி மீதிற் கொடுவந்து நட்டவன் மேன்மரபோர்
மாதிரஞ் சூழரண் மேவுவ துங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) நெடுநாள் வாழும்படி செய்யும் அருநெல்லிக் கனியை
ஒளவையாருக்குக் கொடுத்தவனும், இவ்வுலகில் கரும்புப் பயிரைக் கொண்டு
வந்து நட்டு உற்பத்தி செய்தவன் வழி வந்தவனும், கொல்லிக் கூற்றமாகிய
மலையரணை யுடையவனுமாகிய அதிகமானுங் கொங்கு மண்டலம் என்பதாம்.