நமக்குத்
திறை கொடுக்க மறுத்த அதிகன் எங்கும் உளன் என்று
கரூரிலிருந்து புகழ்ச் சோழர் கேட்ட பொழுது :-
ஆங்கவன்யா
ரென்றருள அதிகனவ னணித்தாக
ஓங்கெயில்சூழ் மலையரணத் துள்ளுறைவான்
(புகழ்ச்
சோழர் புராணம்)
கொல்லிக்
கூற்றத்து நீர்கூர் மீமிசை
பல்வேற் றானை யதிகமான்
(பதிற்றுப்பத்து)
|
இந்த
அதிகமான் பாண்டியனோடு போர்புரிந்ததை நெடுஞ்சடையனது
ஒரு தான சாசனத்தில்,
மாயிரும்
பெரும் புனற்காவிரி வடகரை
ஆயிர வேலி அயிரூர் தன்னிலும்
புகழி யூருந் திகழ்வே லதியனை
ஓடு புறங் கண்டவன். |
என்பதில் கொங்கில்
காவிரி வடகரையில் வாளவந்தி நாட்டின் உபநாடு
ஆன விமலை நாட்டு அயிலு (ரூ) ரிலும், அக்காவிரியின் தென்கரையில்
கிழங்கு நாட்டுப் புகழியூரிலும் போர்புரிந்திருக்கிறான். நாமக்கல்லில்
இவர்கள் சாசனமிருக்கிறது ஆதலின் இவன் ஆட்சி இங்கும் பரவி
இருந்தது.
ஓரி
43.
|
வினரயார்
தொடையணி மூவேந்த ராசை மிகுந்துநச்சத்
தரைமீ தெலாவள முஞ்செறி கொல்லித் தடவரையாள்
துரையாய்த் தமிழ்மொழிக் கல்லும் பகலுஞ் சுரந்து செம்பொன்
வரையா தளித்தநல் லோரிவள்ளல் கொங்கு மண்டலமே. |
(க-ரை)
தமிழ் நாட்டு மூவேந்தரும் ஆவல் கொளத்தக்க எல்லா
வளப்பமும் பொருந்திய கொல்லி மலைக்கு வேந்தாய், அல்லும் பகலும்
ஓயாது தமிழுக்குக் கொடுப்போனான ஓரி என்னும் வள்ளலுங் கொங்கு
மண்டலம் என்பதாம்.
|