வரலாறு
: இவனை ஆதனோரியெனவும், வல்விலோரி எனவும்
கூறுவர். கொல்லி மலையையும் அதனைச் சூழ்ந்த நாட்டினையும்
ஆண்டிருந்தவன். ஓரி "பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி" (அகநானூறு)
"வல்விலோரி கொல்லிக் குடவரை" (குறுந்தொகை) இரவலர்க்கு வரையாது
கொடுக்கும் வன்மையான். கடையெழு வள்ளலி லொருவன். கடையெழு
வள்ளலில் மற்றொருவரான காரிக்குப் பகைவன், இவனைப் பரணர்
நற்றிணை 6,246; கபிலர் 320-ஆம் பாடலிலும், குறுந்தொகை 100-ஆம்
பாடிலிலும் சிறப்பித்திருக்கிறார்கள். கொல்லிக் குடவரை யென்பதால்
கொல்லி மலையின் மேற்குக் கூறு எனத் தோற்றுகிறது.
கொல்லி
மலையின் மேற்குப் பாகமானது பூந்துறை நாட்டின் இணை
நாடான ஏழுர் நாட்டின் றொடரும், ராசிபுர நாட்டின் கூறும், வாளவந்தி
நாட்டின் பாங்கான தூசியூர் நாட்டினிடமும் பொருந்தியுள்ளது.
இந்தக்
கொல்லி மலையின் மேற்குப் பகுதியில் நாடுகளிப்
பொழுதுமிருக்கின்றன. வாளவந்திநாடு - வலப்பூர்நாடு - அரியூர்நாடு
குண்டூர்நாடு - தேவானூர்நாடு - சேவூர்நாடு - தின்னனூர்நாடு - ஆகிய
இவ்வேழு நாடுகளும் சேலம் ஜில்லா நாமக்கல் தாலூகாவைச்
சேர்ந்திருக்கின்றன. பயிலநாடு - பிறக்கரை நாடு - சித்தூர் நாடு -
இடைப்புளி நாடு - திருப்பளி நாடு - குண்டுணி நாடு - ஆலத்தூர் நாடு
ஆகிய இவ்வேழு நாடுகளும் ஆற்றூர்த் தாலூகாவைச் சார்ந்தனவாக
இருக்கின்றன.
வையாவிக்
கோப்பெரும்பேகன்
44.
|
கையாரக்
கான மயிலுக் கிரங்கிக் கலிங்க மருள்
செய்யாண் டகைகரு ணைக்குவைப் பாகத் திகழ்தருமவ்
வையாவிக் கோப்பேரும் பேகனெனும்பெரு வள்ளறங்கு
வையா புரியெனுங் கோநக ருங்கொங்கு மண்டலமே. |
(க-ரை)
காட்டில் ஆடிக் கொண்டிருக்கும் மயில், குளிருக்கு
ஆற்றாது ஞடுங்குகிறதென்று நினைந்து, தான் மேலே போர்த்திருந்த
உயர்ந்த ஆடையை அதன் மேற் சாத்திய, வையாவிக்கோப் பெரும்பேகன்
வசிக்கும் வையாவிபுரி என்னும் ஊரும் கொங்கு மண்டலம் என்பதாம்.
|