5

                        நாடுகள்

பூந்துறை நாடு தலையனாடு வாழவந்திநாடு
தென்கரை நாடு தட்டயனாடு அண்டநாடு
காங்கேய நாடு பூவாணியநாடு வெங்காலநாடு
பொன்கலூர் நாடு அரையனாடு காவடிக்கனாடு
ஆறை நாடு ஒருவங்க நாடு ஆனைமலை நாடு
வாரக்கனாடு வடகரை நாடு இராசிபுர நாடு
திருவாவினன்குடி நாடு கிழங்கு நாடு காஞ்சிக்கோயினாடு
மணனாடு நல்லுருக்கனாடு குறுப்புநாடு

                     இணை நாடுகள்

பருத்திப்பள்ளி நாடு விமலை நாடு சேல நாடு
ஏழூர் நாடு

தூசூர் நாடு

இடைப்பிச்சனாடு
முதலியன

                        தலம்

4.



செஞ்சொற் கரைசை திருவானீ கூடல் திருமுருகர்
தஞ்சத்தென் புக்கொளி பேரூர் குரக்குத் தளியுடனே
வெஞ்சனற் கூடல்செங் குன்றூரறப்பள்ளி வெண்ணெய் மலை
மஞ்சு திகழ்கரு வூர்சேர் வதுகொங்கு மண்டலமே.

     (க-ரை) திருப்பாண்டிக் கொடுமுடி, பவானி, திருமுருகன் பூண்டி,
அவிநாசி, *பேரூர், குரக்குத்தளி, வெஞ்சமாக்கூடல், திருச்செங்கோடு,
அறப்பள்ளி, வெண்ணெய் மலை, பேரூர் முதலிய திருப்பதிகள் சேர்வது
கொங்குமண்டலம் என்பதாம்.

                       மலை

5.



கொல்லியும் வைகை யலைவாய் பழநிபொற் கொங்கணவர்
வில்லியு மோதி வராகந் தலைமலை வெண்ணெய் மலை
அல்லியை சென்னி கிரிகஞ்ச வெள்ளி யரவகிரி
வல்லியு ளானை மலைசூழ் வதுகொங்கு மண்டலமே.


     * பேரூர், குரக்குத்தளி - அறப்பள்ளி - தேவாரவைப்புத்தலங்கள்
வெண்ணைய் மலை திருப்புகழ் பெற்றது.

     + வில்லி - சேரன் = சேர்வராயன் மலை