ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க
சோழற்கு ஆண்டு 34-வது அமராபரணசீய
கங்க நம்பிராட்டியான அரிய பிள்ளை திருவல்ல முடைய நாயனார்க்கு
வைத்த சந்திவிளக்கு ஒன்றும் நாச்சியார்க்கு வைத்த விளக்கிரண்டுக்கும் .....
(S.I.1.
Vol. III P. Part 122 - 123)
பவணந்தி
முனிவர்
47.
|
கங்கக்
குரிசி லுவக்கநன் னூலைக் கனிந்துபுகல்
துங்கப் புலமைப் பவணந்தி மாமுனி தோன்றிவளர்
கொங்கிற் குறும்பு தனிலாதி நாத குருவிளங்கு
மங்குற் பொழிற்சன காபுர முங்கொங்கு மண்டலமே |
(க-ரை)
சீயகங்க
அரசன் மனமுவக்குமாறு, நன்னூல் என்னும்
இலக்கண நூலைப்புகன்ற தமிழ்ப்புலமை நிரம்பிய பவணந்தி முனிவர்
பிறந்து வளர்ந்தது குறுப்பி நாட்டில் ஆதிநாத தீர்த்தங்கரர் விளங்குதலான
சனகாபுரம் (சீனாபுரம்) கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு
: கொங்கு மண்டலத்தில் குறுப்பி நாட்டில் சனகாபுரம்
(சீனாபுரம்) என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர் பவணந்தி முனிவர்.
ஆனாலிவரைத் தொண்டைமண்டல சதகத்தே.
(மேற்)
தன்னூர்ச்
சனகையிற் சன்மதி மாமுனி தந்தமைந்தன்
நன்னூ லுரைத்த பவணந்தி மாமுனி நற்பதியுங்
சின்னூ லுரைத்த குணவீர பண்டிதன் சேர்பதியும்
மன்னூ புரத்திரு வன்னமின் னேதொண்டை மண்டலமே. |
எனக் காணப்படுகிறது.
பவணந்தி முனிவரது ஊரைப்பற்றிய விசாரிப்பில்
ஒன்றிற்கொன்று முரண்படுவதால் ஒன்று கொள்ளப் படவும் மற்றொன்று
தள்ளப்படவுமாக ஏற்படுமே எனச் சிலர் சங்கிக்கலாம். மேற்கூறிய இரண்டு
மண்டல சதகச் செய்யுட்களும் கொள்ளத் தக்கனவே ஆம். கொங்குமண்டல
சதகத்தே "பவணந்தி மாமுனி தோன்றிவளர் ........ சனகாபுரம்" என்று
கூறுவதால் அவர் பிறந்து வளர்ந்த வூர் இது வென்றும், சனகையிற்
|