56

     II. கங்க பாடியான முடிகொண்ட சோழ மண்டலத்துத் தென்கரை
இடை நாட்டு மாயிலங்கையான ஜனநாத புரத்து

     III. கங்கபாடி தென்கரையிடை நாட்டு

     IV. பெரிய நாட்டு மாயிலங்கையான ஜனநாதபுரத்து

நளிர் சுரம் நீங்கியது

48.




திருக்கூட்டத் தாரையுஞ் சேர்ந்த நளிர்சுரந் தீரவன்பின
பெருக்காக "வல்வினைக் கிவ்வினை யாமெனப்" பீடுபெறத்
திருக்காழிப் பிள்ளையார் நற்றமிழ் பாடவத் தேய
முற்றும் வருத்தாதந் நோயின்னும் நீங்கிய துங்கொங்கு
                                  
    மண்டலமே.

     (க-ரை) சீகாழிப் பிள்ளையாராகிய சம்பந்தமூர்த்தி நாயனார்
திருச்செங்கோடு என வழங்குந் திருக்கொடி மாடச் செங்குன்றூர்க்குத்
திருக்கூட்டத்தாருடன் எழுந்தருளியபோழுது நளிர்சுரம் அடியார்களையும்
தீண்டவே "அவ்வினைக் கிவ்வினையாம்" என்ற தொடக்கத்ததான தேவாரப்
பதிகத்தைப் பாடி அவ்வூரே அன்றி அந்நாடு முற்றிலும் அவ்விஷ
நோய்தீரும்படி ஓதப்பெற்றதும் கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு : சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்த மூர்த்தி
சுவாமிகள் பலநாடுகளிற் சென்று தேவாரப் பதிகங்கள் பாடிக்கொண்டு
கொங்கு நாட்டிற் காவேரிக்குத் தென்கரையிலுள்ள ஆலயங்களைத்
தரிசனஞ் செய்து கொண்டு வடகரையிலுள்ள திருச்செங்கோடு என
வழங்குங் கொடி மாடச் செங்குன்றூருக் கெழுந்தருளினர். தேவாரம் பாடி
அர்த்தநாரீசுரரைத் தரிசித்துப் பொன்னி நதிக்கு. மேல் பாவில் திருநண்ணா
முதலிய தலயாத்திரை செய்து கொண்டு மறுபடியுந் திருச் செங்கோட்டுக்கு
எழுந்தருளினர். அப்பொழுது பனிப்பருவம் வந்தது. பலநாள் அங்கு
வசித்திருந்தமையால் அந்நாட்டில் அக்காலத்து வருத்தும் குளிர் முன்னான
சுரம் திருக்கூட்டத்தாரையும் பீடித்தது அறிந்த ஞான சம்பந்தப்
பெருந்தகையார், "அவ்வினைக் கிவ்வினையாம்" என்ற பதிகத்தைத்
தொடங்கி அடியார்களைத்