57

தீண்டப்படா என்று ஆணை வைத்துத் திருநீலகண்டப் பதிகத்தை
ஓதியருளினார். உடனே திருக்கூட்டத்தாரை அன்றியே அந்நாட்டிலுமே
அந்நோய் நீங்கி விட்டது. இந்தத் திருநீல கண்டப் பதிகத்தை மந்திரமாக
ஓதி விபூதி பூசினும் நாளும் நளிர் சுரம் நீங்கிப்போம் என்பது
அன்பர்களின் நம்பிக்கை.

                         (மேற்)

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மதுவறியீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம்பி ரான்கழல் போற்றுது நாமடியேஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.

                       சிவப்பிரகாசர்

49.



பண்பார் சிவப்பிர காசனைத் துட்டர் பழிக்கவவர்
கண்பார்க்க 'வில்லார் பொதுச்சபை யின்வித்த கா'வென்வோர்
வெண்பா சொலக்கல் லிடபங் கடலையை மென்று தின்னும்
வெண்பா வலர்வரு செங்கோடை யுங்கொங்கு மண்டலமே'

     (க-ரை) சிவப்பிரகாசரை அறிவிலாப் பொல்லார் பழித்தார்கள்.
அவர்கள் நேரிற் பார்த்திருக்கவே "வில்லார் பொதுச்சபையின் வித்தகா"
என்றவெண்பாவை ஓதியருளக், கல் இடபமானது எழுந்து, வைத்த
கடலையை மென்றுதின்ற மகிமை பெற்ற திருச்செங்கோடு கொங்கு
மண்டலம் என்பதாம்.

     வரலாறு : நவகோடி சித்தவாச புரமான திருவாவடுதுறையி
லெழுந்தருளி யிருந்த சிவப்பிரகாசர் திருச்செங்கோட்டுக்கு எழுந்தருளினர்.
அவர் வரும் வழியில் செய்த அற்புதங்களைக் கேள்வியுற்ற அக்கோயிலில்
வந்தாரிற் சில அறிவிலிகள் அற்புதம் செய்திருப்பரேல் (ஸ்ரீ அர்த்தநாரீசுரர்
திருமுன் துஜஸ்தம்பத்தருகிலுள்ள) இந்தக்கல் இடபம் எழுந்து, நாங்கள்
வைக்கும் கடலையை உண்ணட்டும் பார்க்கலாம் என இழிவுரையாடினார்கள்.
இதனைப் பெறாது தம் ஆசிரியரை அடியார்கள் வேண்டினார்கள்.
சிவபெருமான் அருளுளதேல் இது ஒரு பெரிதோ என்று விபூதியைக்
கையிலெடுத்துக் கொண்டு, "வில்லார் பொதுச் சபையின் வித்தகா" என்னும்
முதலையுடைய வெண்பாவைக் கூறவே, எழுந்து அவர்கள் திடுக்கிடும்படி
முக்காரமிட்டு, வைத்து கடலையை உண்டு பழய படியே படுத்தது.