(மேற்)
வில்லார்
பொதுச் சபையின் வித்தகா நீயுமுனங்
கல்லானைக் கிக்கருத்திக் காட்டியவன் - வல்லாண்மை
கட்டுரையே யாயினிந்தக் கல்லே றெழீஇக்கடலை
இட்டஇவர் முன்றினச்செய் யே.
(அத்துவிதவெண்பா
முகவுரை)
பொன்னின்
மழை பொழிந்த தெங்கள் நாடு - வண்ணப்
பூமலரின் மாரிமிகப் பொழிந்த தெங்கள் நாடு
கன்னி யுமைக்கிடம் பகர்ந்த நாடு - நல்ல
கல்லிடபங் கடலை தின்று சொல்லுயர்ந்த நாடு
(திருச்செங்
- குறவஞ்சி)
|
வேலூரிலிருந்த
விருபாக்ஷிராயர் மந்திரியைக் காணுமாறு வீரசைவ
தீக்ஷை இவர் பெற்றதாகச் சரித்திரங் காணப்படுகிறது. இதனால் இது
நடந்தது. இவ்வரசர் காலமாகிய கி.பி. 1467 முதல் 1485-க்கு இடைக்காலமாக
இருக்க வேண்டும். இச்சரித விரிவு அத்வைத வெண்பா - திருச்செங்கோட்டு
மான்மியத்திலும் சேலம் ஜில்லா கஜட்டியரிலுங் காணலாம்.
வேலவன்
மேய்ப்போனாக வந்தது
50.
|
பெருமை
மிகு"மர வச்சிலம் பாமெனிற் பெட்புறுமவ்
வரவு படம்விரித் தடாததென்" னென்றகத்துனுமோர்
கருவி வெருக்கொள வாமேய்ப் பவனாக் கனிந்துதிரு
மருகன் மயில்கொத்து மென்றெனச் சொல்கொங்கு மண்டலமே |
(க-ரை)
இது நாகமலையானால் இந்த நாகம் படத்தை விரித்து
ஆடாமலிருக்க வேண்டிய காரணம் என்ன? என்று, அகங்காரங்
கொண்டுவந்த புலவன் திடுக்கிடும்படி (செங்கோட்டு வேலவர்) மாடு
மேய்ப்போனாக நின்று, இலக்குமியின் மருமகனாகிய முருகக்கடவுளினது
வாகனமாகிய மயில் மலையின் பேரிலிருப்பதால் கொத்தி விடுமென்று
பயந்து ஆடாமலிருக்கிறது என்று விடையளித்ததும் கொங்குமண்டலம்
என்பதாம்.
வரலாறு
: பாண்டி நாட்டில் திருக்குருகூரில் பிரதிவாதி பயங்கரன்
எனப் பிரபல பண்டிதன் ஒருவன் இருந்தான். அவன் தேச சஞ்சாரஞ்
செய்து அங்கு அங்கு உள்ள சமஸ்தானங்களிற் சென்று அவ்விடத்துள்ள
வித்வான்களிடத்துத் தர்க்கித்துச் சயங்கொண்டு
|