(க-ரை)
கொல்லிமலை - வைகைப் பொன்மலை - அலைவாய் மலை
- பழநி மலை - பொன்னூதி மலை - கொங்கணவர் மலை சேர்வராயன்
மலை - ஓதியூர் மலை வராக மலை - தலைமலை - வெண்ணெய் மலை.
சென்னி மலை - கஞ்சமலை - வெள்ளிமலை - நாககிரி - ஆனை மலை
சூழ்வது கொங்குமண்டலம் என்பதாம்.
நதி
6.
|
திருமணி
தொப்பைபூங் காவேரி வானியுஞ் செய்யநதி
தருமணி காஞ்சி பொருனைநள் ளாறொடு சண்முகமுங்
குருமணி பாலை நதிவாழை +காரி குடவனதி
வருமணி சண்பகஞ் சிற்றாறு சூழ்கொங்கு மண்டலமே. |
(க-ரை)
திருமணிமுத்தாறு - தொப்பையாறு - பவானியாறு -
செய்யாறு - நொய்யலாறு - ஆம்பிராவதி - நள்ளாறு - சண்முக நதி -
பாலையாறு - வாழையாறு +பாரத்துவாசநதி - குடவனாறு - சண்பக நதி -
சிற்றாறு சூழ்ந்துள்ளது கொங்குமண்டலம் என்பதாம்.
குடிவளம்
7.
|
நீடுந்
தமிழ்மன்னர் மூவர்க்கு மம்பொனெடு மகுடஞ்
சூடும் பெருமை படைத்துயர் மக்களின் சோர் வகற்றிக்
கூடும் பலவுண வூட்டுவே ளாளக் குடிசிறந்து
மாடும் பெருகி வளர்வதன் றோகொங்கு மண்டலமே. |
(க-ரை)
சேர சோழ பாண்டியர் என்னும் தமிழ் வேந்தர்
மூவர்க்கு மகுடஞ் சூடும் பெருமையை அடைந்து, எல்லா உயிர்க்கும்
உழவுத்தொழிலாற் பல உணவுப்பொருள்களை யுண்டாக்கி ஊட்டி
வளர்க்கும், வேளாண்மைக்குடிச் சிறப்புற்றுப் பசு முதலியன நன்கு
வளர்ச்சியுறுவது கொங்குமண்டலம் என்பதாம்.
+காரியாறு - கரிக்குருவி
- பாரத்துவாசம்
|