ஆணூர்
என்பது நொய்யல் நதிக்கரையை யடுத்த ஓர் சிற்றூர்
இதனை யொட்டி (நத்தக்) காரையூர், பழைய கோட்டை என்னும் ஊர்கள்
இருக்கின்றன.
ஆணூர்ச் சர்க்கரை காய்ச்சிய நெய்யிற் கையிட்டுச்
சத்தியஞ் செய்தல்
52.
|
முகஞ்சோர்ந்
தகன்றிடு மேகாலிப் பாவலன் முன்ன நின்றே
யிகழ்ந்தே னிலையைய வென்று சுடுநெ யினிற்கை யைவிட்
டுகந்தே யுணுமெச்சில் வாயைக் கழுவி யுவப்பியற்றி
மகிழ்ந்தே புகழ்பெறு சர்க்கரை யுங்கொங்கு மண்டலமே.
|
(க-ரை)
தன்னை இகழ்ந்ததாகக் கேள்வியுற்று முகம் வாடிச்
சென்ற வீரபத்திரன் என்னும் ஏகாலியர் குலத்துதித்த புலவனைப் பின்
தொடர்ந்துபோய் மறித்து நின்று உம்மை இகழவில்லையென்று
கொதிநெய்யிற் கையைவிட்டுச் சத்தியஞ் செய்து, அப்புலவன் எச்சில்
வாயைக் கழுவி அப்புலவனை மகிழ்வித்த சர்க்கரை யென்னும் உபகாரியுங்
கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு
: கீழ்கரைப் பூந்துறை நாட்டில் திருச்செங்கோடு என்னும்
நகரில் ஏகாலியர் (கொங்கவண்ணார்) மரபில் வீரபத்திரன் என்னுந் தமிழ்ப்
புலவர் ஒருவர் கேள்விகளில் வல்லுனராய் வாழ்ந்தனர். "நான் பெற்ற
இன்பம் பெறுக இவ்வையகம்" என்றவாறு தான் அடைந்துள்ள கல்வி
நலனை உலகினர்க்கு ஊட்டுமாறு பல நாடுகளுக்குச் சென்றனர். தமிழை
வளர்க்குந் தாயனைய தன்மையனெனக் கேள்வியுற்றுக் காரையூரை யடைந்து
நாட்டுத் தலைவனான சர்க்கரை என்பாரை நோக்கினன், அவ்வுபகாரி
பெரிதும் உபசரிக்க மகிழ்ந்திருந்து அளவளாவிச் சல்லாபமாடினர், சற்று
விடைபெற்று உட்புகுந்த மன்றாடியார். செய்வினை முடித்துக்கொண்டு
அமுது படைத்தற்கு ஏற்றன செய்தனர். மனையுளிருந்து முன்றிலில்
வந்தானொருவன் கவிஞரை நோக்கி ஐயா, தங்களுக்கு அடிசில் படைக்கச்
சற்று நாழிகையாகும் என நினைக்கிறேன் என்றனன். நம்மைப்பற்றி உள்ளே
யாதோ இழிவுரை நடந்திருக்கிறது, அதனாற்றான் இவன் வலிய நம்மிடஞ்
சொன்னான் என நினைந்து மதிப்பற்ற இடத்திற் புசிப்பது, வசிப்பது
|