66

                     சவுக்கடி பெற்றது.

53.



மீறு முலகிலெட் டுத்திக்குஞ் சொட்டையில் வெல்ல வல்லோன்
கூறுந்தென் காரையிற் சர்க்கரை வேந்தன் கொழுந் தமிழாற்
பேறும் புகழும் பெறவேண்டி நாவலன் பெற்றகையான

மாறுஞ் சவுக்கடி பெற்றது வுங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) எட்டுத் திக்குகளில் உள்ளாரையுஞ் சொட்டை யென்னும்
ஆயுதத்தால் வெற்றி கொள்ளும் ஆற்றலுடையவனும் ஒரு புலவன்
சவுக்காலடிக்கப் பொறுத்தவனுந் தென்றிசையில் விளங்குங் காரையூர்ச்
சர்க்கரை யென்னுந் தலைவனுங் கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு : தென்னாட்டிற் புகழ்பெற்ற ஒரு புலவர் காரையூர்க்கு
வந்து சர்க்கரையைப் பார்த்தார். இனிமையுறப் புசிப்பித்தனர். இருந்து சற்று
உபசார மொழிகள் பேசிக்கொண்டே தாம்பூலத்துடன் நல்லாடை செம்பொன்
வைத்த தட்டத்தை இருகையாலும் எடுத்து நீட்டினர். இதனைப் பெறாது
கவிராயர் பக்கத்திலிருந்த குதிைரைச் சவுக்கை எடுத்து பளீர் பளீர் என்று
தாக்கினர். அடியுண்ட பிரபு, புலவர் கையைப் பிடித்துக்கொண்டு ஐயா,
ஒரு பிசகுஞ் செய்திலேனே எனக்கெஞ்சினர். ஐயா, நாம் உம்மிடத்து எதன்
பொருட்டு வந்தேன். நான் வாசித்துத் தேறியுள்ள நல்வழிகளைப்
புகட்டுதற்கன்றோ? அவ்வாறு நினையாது, பணந்தண்ட வந்தவனாக
மதித்துத் தட்டத்தில் பொருளை வைத்துக் கொடுத்தீரே, இதைவிட என்ன
அவமதிப்பு வேண்டும் என்றனர். புலவர் கல்விக் கடலே, தாங்கள் கூறுவது
உண்மைதான். அதுவே எனக்குப் பிரியம். வழக்கமும் அதுவே; என்றாலும்
இப்பொழுது வெகு முக்கியமான வேலையைக் கருதிப் பயணமாக
இருக்கிறேன். தாங்கள் எழுந்தருளியாகாதிருந்தால் முன்னமே
சென்றிருப்பேன். என்னை மன்னியுங்கள். சில நாள் இங்கு தங்குங்கள்.
நான் வந்து விடுகிறேன் என்றனர். புலவர் பெருமான் மனது வருந்தி ஐயா,
தங்கள் ன்னோர்கள் தமிழ்ப்புலவர்களை மிகு மேன்மையாக மதிப்பவர்கள்
எனக்கேள்விப்பட்டுவந்தேன் அக்குணந் தங்களிடத்துமிருப்பதை அறிந்து
கொண்டேன். இக்கொடுஞ் செய்கைக்கு என்னை மன்னியுங்கள். இச்சவுக்கடி
புகழைக் கொடுக்கும் எனப் புகழ்ந்து,