(மேற்)
கண்டாற் புலவரை
மேனாம்பு பேசுங் கசடரிட
மிண்டாநல் லுத்தமக் காமிண்ட னேவித்து வான்களுக்குத
தொண்டா புலவர் சவுக்கடி யேற்ற சுமுக கொடைத்
தண்டா மரைக்கையுத் தண்டா நலதம்பிச் சர்க்கரையே
(பழம்பாடல்)
|
எனக் கூறினர்.
"கற்றாய்ந்த
நாவலர்தன் கையிற் சவுக்கடியும்
பெற்றான் சயத்தம்பம் பேருலகில் நாட்டுவித்தோன்"
(நல்லதம்பிச்
சர்க்கரை காதல்)
|
சொட்டை
என்பது இருபுறமுங் கூர்மையுள்ள ஓர் ஆயுதம்; அதில்
வல்லோர்.
சூரிய
காங்கேயன்
54.
|
வில்லாள
ராகிய மூவேந்தர் போரின் வினைமுகத்து
நில்லா தகன்றிடச் செய்யாறை வாண நிருபதியைக்
கொல்லாது பற்றியப் பாண்டியன் முன்னங் கொணர்ந்து விட்ட
வல்லாண்மை மீறிய சூரிய னுங்கொங்கு மண்டலமே. |
(க-ரை)
தமிழ் நாட்டு மூன்று மன்னர்களையுந் திகிலடையும் படி
செய்ய வல்ல ஆறகழூர் வாணனைப் பிடித்து, பாண்டியன் முன்னம்
நிறுத்திய சூரியனும் கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு
: சேலஞ் ஜில்லாவும் ஆற்காடு ஜில்லாவும் சந்திக்கிற
இடத்தில் ஒன்றினுள் ஒன்றாக ஆறு அகழிகளால் சூழப்பெற்றதான
ஆறகழூர், மகத மண்டலம் - (அது மலாடு ஜனனாதவள நாடு) அவ்விடத்து
மாவலிவாண வமிசத்தானான வாண அரசனானவன் பராக்கிரமத்தோடு
அரசாண்டு வந்தான். மகதம் என்னும் நாடு நாட்டதிபதியானதால் மகதைப்
பெருமாள் என்னும் மற்றொரு பெயரும் உள்ளான். இவன் சேர சோழ
பாண்டியர்களான மூவேந்தரையும் மதிப்பதில்லை குறும்பு செய்வன். ஆனால்
பல வித்வான்களால் பாடப் பெற்றுள்ளான். இவனை யாரேனும் பிடித்துத்
தன்முன் அடக்கி நிறுத்துவரேல் வேண்டுவன உதவுவேன் எனப் பாண்டியன்
பறைசாற்றுவித்தான். கீழ்கரைப் பூந்துறை மோரூர் கண்ண குலத்தானான
சூரியன் என்னுஞ் சேனா வீரவாலிபன், இதனை முடிப்பதாக முன் வந்தான்.
தனக்கு வேண்டிய சாதனங்களைப் பெற்றுப்போய் ஆறகழூரில் மாறுவேடம்
பூண்டு உளவறிந்திருந்தான். சமயம் வாய்த்த பொழுது உடன் வந்த
துணையாளர்களுடன் பல்லக்குத் தூக்கிகளால் எடுத்தபடியே மகதை எல்லை
|