7

                   (மேற்)

புலிக்கொடி கயற்கொடி பொருவிற் கொடியுடை
வேந்தர் நாட்டுறை வேளாண் மாக்கள்
சோழிய ரென்றும் பாண்டிய ரென்றுங்
கொங்கரென் றும்பெயர் கொண்டன ரவருள்

முன்னமுரைத்த முத்தமிழ் வேந்தரும்
எங்கள்மூ வருக்கு மியன்முடி சூட்டுதற்
குங்களை யமைத்தன முயர்ந்து கொள்வீரெனக்
கொண்டு மகிழ்ந் தனையர் கோத்தன்மையரே

     (நீதிநூற் சிறப்புப்பாயிரம் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை)

                 காவிரி உற்பத்தி

8.



சீரார் வளவ னிலம்புன னாடாச் செழிப்புறவும்
பேரார் வரநதி பெய்துறு பாவம் பிரிந்திறவும்
ஏராரும் பொன்னி புவியுள முன்ன குடமுதவி
வாரார் பெருமை படைத்தது நீள்கொங்கு மண்டலமே

     (க-ரை) சோழமண்டலம் நீர்ப்பாசனமாகவுங், கங்கைநதி தனது
பாவங்களை நீக்கிக் கொள்ளவும் வாய்த்தது காவேரி நதி அந்தக் காவேரி
அகத்திய முனிவர் கைக்கரகத்திருந்து தரையில் விழுதற்கு முதலில்
இடங்கொடுத் துதவியது கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு:- பார்வதி தேவியார் திருமண நாளில் தேவர் முதல்
யாவர்களும் மேருமலையில் ஒருங்கு சேர்ந்தார்கள். சுமையேறிய வடதிசை
அழுந்தியது. தென்புவி மேலெழுந்தது. பூமி மட்டமாகுமாறு அகத்தியரைத்
தென்மலையான பொதியையிற் போயிருக்கச் சிவபிரான் கட்டளையிட்டனர்.
தமிழ்த் தேர்ச்சி யுற்று அகத்தியர் காவிரி நதியைக் கைக்கமண்டலத்தில்
அடக்கிக் கொண்டு கொங்கு நாடடைந்தனர். சூரபதுமன் முதலினோர்
துன்பத்துக்கு ஆற்றாத இந்திரன், வேற்றுருவங் கொண்டு சீகாழிப்பதியில்
நந்தனவனத் திருப்பணி செய்து கொண்டிருந்தனன். நீரின்றிச் செடிகள்
காய்ந்தமை கண்டு வருத்த முற்று ஆனைமுகப் பிள்ளையாரை வேண்டினன்.
வெண்காக்கை வடிவு கொண்ட விநாயகர் அகத்திய முனி