72

களாயும், நாட்டுக் குருத்வமுடையவர்களாயும் இருக்கிறார்கள். புதியவர்கள்
பாடல் பெற்ற தலங்கள், மற்றும் பிரதான ஆலயங்களில் அர்ச்சகர்களாயும்
ஆசாரியத்வமுடையர்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

                   பூந்துறை - குப்பிச்சி

56.



தேசுற் றிலகு விசய நகரத் திறலரசன்
வாசற் பணிக்கனை மண்கொளக் குத்தியம் மன்னனைக்கண்
டேசற் படுமசமாவினை யாட்டி யெவருமெச்ச
மாசற்ற நாடுகொள் குப்பிச்சி யுங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) விஜய நகரத்து அரண்மனை வாயிற் காவலனைக் குப்புறவிழ
அடித்து வீழ்த்தி, அரண்மனையுட் புகுந்து அரசனைக் கண்டு மசக்குதிரை
ஏறி ஆட்டிப் பூந்துறை நாட்டதிகாரம் பெற்ற குப்பிச்சியுங் கொங்கு
மண்டலம் என்பதாம்.

     வரலாறு : மேல்கரைப் பூந்துறையில் கொங்குவேளாளரில்
காடை குலத்தில் மாட்டையாக்குப்பிச்சி என்போன் விஜயநகரஞ் சென்றான்.
அங்கே ஒரு மல்லன் இடதுகாலிற் சங்கிலி ஒன்றின் தலைப்பைக் கட்டி
மற்றொரு தலைப்பை வாசற்படியின் எதிர்ப் பக்கமாக மேலே மாட்டித்
தோரணம் போலத் தொங்கவிட்டிருந்தான். வல்லவர்களானாற் றன்னைச்
சயித்து உள்ளே போக வேண்டியது, இல்லையேல் தன் காலிற் கட்டித்
தொங்கவிட்டிருக்கும் சங்கிலிக்கும் கீழே நுழைந்து போகவேண்டியது
என்றிருப்பதைத் தெரிந்து கொண்டான். அந்த மல்லனுடன் யுத்தஞ்
செய்து குப்புற வீழ்த்தினான். அத்தாணி மண்டபத்துட் புகுந்து வேந்தனைக்
கண்டான். ஒரு குதிரை இருக்கிறது, அதன் மேலேறிச் சவாரி செய்து
வருவாயேல் நீ வல்லாய் என்றரசன் கூறினன். அப்படியே நடத்துகிறேன்
என்று ஒப்புக்கொண்டனன். அந்தக் குதிரையோ பொல்லாதது. ஏறினவுடனே
அந்நகரத்து அருகிள்ள நீர் நிலையுட் கொண்டு சென்றுகீழே தள்ளிப்
பிறழ்ந்து மிதித்துவருந் தகுதி பெற்றது என்பது தெரிந்தான். சுண்ணாம்புக்கல்
சம்பாதித்துத் துணிப்பையுள் நிரப்பிக்குதிரை அடிவயறு உறக்கட்டிவிட்டு
ஏறினான். உடனே குதிரை அதிவேகமாக வீதிவழியாகச் சென்று
வாரிதிபோலத் தேங்கியுள்ள நீர்நிலையுள் வழக்கப்படி கனைத்துக்
கொண்டு இறங்கியது. வயற்றளவு நீருட் செல்லவே அந்நீர் பட்டவுடன்
சுண்ணாம்புக்கல் கொதிப்புற்றது. குதிரை அதனால்