74

               சர்க்கரை, சோழனை வெருட்டியது.

57.



பொருனையும் பொன்னியு மோங்கிப் பெருகிப் பொசிந்து மிகப்
பெருமை யுறுகொங்கிற் சென்னி யிடர்செயப் பெருஞ்செழியன்
அருமை யுளத்தெரிந் தன்னோன் மூதுகிட் டகலவிசை
வரும முறுகாரை மன்றாடி யுங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) வளமை மிகுந்த கொங்கு மண்டலத்திற் சோழன் பல
தீங்குகள் செய்ய நோக்கிய, பாண்டியனுடைய கருத்தை அறிந்து சோழ
அரசன் முதுகிட்டோடும்படி செய்துஓட்டிய காரையூர் மன்றாடி யென்பானுங்
கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு : கொங்கு மண்டலமானது பலநாள் சோழ வேந்தர்களது
ஆட்சிக்குள் அடங்கி இருந்தது. சிற்றின்பப் பிரியத்தாலும், ஐக்கியக்
குறைவாலும் சோழர் வலிகுன்றினர். அக்காலத்திற் பாண்டிய அரசர்களில்
ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் என்பவன் ராஜாதி ராஜன் ஆனான். சோழ
வமிசம் என்னும் மலைக்குத் தான் ஒரு இடியேறு எனப் புகழ்பெற்றான்.
சோழ நாடு கொங்கு நாடுகளைக் கைக்கொண்டான். காரையூர்
பயறகுலத்தவனான சர்க்கரை மரபினனொருவன் பாண்டி மன்னனைக்
கண்டான். இவனது முன்னோர்களின் அரும்பெருஞ் செயல்களைக்
கேள்வியுற்ற பாண்டியன், இவனது வீர தீரங்களைக் கண்டு உடனிலை
வீரனாக வைத்துக் கொண்டான். பின்பு சில தினத்துள் இவனது
ஆண்மை, எதிரியை வயப்படுத்தல், வெருட்டல் முதலிய அரசியற்
றந்திரம் சொற்சாதுரிய முதலிய குணங்களை அறிந்து சேனாதிபதிப்பதவி
கொடுத்தனன். அப்போதுள்ள சோழன் படையுடன் வந்து கொங்கு நாட்டைச்
சூறையாடினான். இதனையறிந்த பாண்டியன் சோழனைத் துரத்தி யடிக்கும்படி
ஏவினான். இவ்வாலிப வீரன் படையுடன் சென்று படையை நிறுத்திவிட்டு
மிகுந்த தைரியத்துடன் சோழனிடஞ் சென்று, தன்னை அறிவித்து ஐயா,
மிகுந்த அன்பாகத் தங்கள் முன்னோர் காத்துவந்த இக் கொங்கு நாட்டைக்
கொள்ளையாடுகிறீர்கள்; இது தருமமாகாது; கருணைகூர்ந்து கொள்ளைப்
படையைத் திரும்பிப் போமாறு கட்டளையிடுதல் வேண்டுமெனத்
தெரிவித்தான். ஒப்பாது சினந்தனன். சோழ வேந்தர்களின் கீழ் எங்கள்
முன்னோர்கள் சேனாபதிகள், வீரர்கள், நாட்டதிகாரிகளாகவும் இருந்து
வந்தனர். சோழ அரசுரிமை கொங்கோன்மையாய் விட்டதுமன்றி இந்நாடு