77

                    மொழி பெயர்ப்பு

     பட்டக்காரவர்கள் 'அன்போடு வரவேற்றதற்காகவும்' அவருடைய
அழகான கால்நடைகளைப் பார்த்த சந்தோஷத்திற்காகவும் அவரை
வந்தனம் செய்யப் பிரியப்படுகிறேன். மாகாணத்துக்கு வேண்டிய பண்ணயக்
கால் நடைகள் விஷயத்தில் அவர் அருமையான வேலை செய்து வருகிறார்.
இது விஷயத்தில் என் மனப்பூர்வமான பிரியத்தை அவர் வகிக்கிறார். அவர்
உதாரணத்தை மற்றவர்கள் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன்.

பழயகோட்டை,                           (ஒப்பம்) பென்ட்லண்டு
24, அக்டோபர் 1916                            மதராசு கவர்னர்

     இவ்வாறு பசு ஓம்பலால் மன்றாடி என்ற பெயர் வந்திருக்கலாம்.
அல்லது,

குழைமறை கதினானைக் கோதிலா ரூரர் நோக்கிப்
பழைய மன்றாடிபோலு மிவனென்று பண்பின்மிக்க
விழைவுறு மனமும் பொங்க வெண்ணெய்நல் லூராயே லுன்
பிழைநெறி வழக்கை யாங்கே பேசநீ போதா யென்றார்

தடுத்தாட்கொண்ட புராணத்து இத்திருவிருத்தத்தில் வரும்மன்றாடி
என்னுங் குறிப்புமொழி, வழக்கிற் கைவந்தவன் எனப் பொருள்படுகின்றது.
முற்காலத்து முதன்மையாளர் மரநிழலில் போட்டுள்ள கற்பலகையில் கூடி
ஊரார் குறையைக் கேட்டு நியாயத் தீர்ப்புச் சொல்வது பழயவழக்கம்.
அக்கூட்டத்துக்கு (பஞ்சாயத்துக்கு) மன்றம் என்று பெயர். அதில் இடம்
பெற்றவர்களுக்கு மன்றாடி என்ற பெயர் இருக்கலாம் எனக்கருதற்கு,
முகுந்தை என்னும் குரக்குத்தளி, கொழுமம் முதலிய இடத்துச் சாசனங்கள்,
இடந்தருகின்றன. சிலப்பதிகாரத்தும் மன்றங்களின் விவரமும்
கூறப்பட்டுள்ளது.

     மன்று = பொது - சபை. ஆடி = வழக்குப் பேசுவோன்.

                    அகளங்கன்

58.



கருவித் தடிப்படி யாதம ராற்றிடு கம்பணனைச்
செருவிற் படவென்ற தீரனை நோக்கியச் செம்பியனுஞ்
சுரிகைப் படையினில் வல்லோ னகளங்கச் சோழனென
வருபட்ட மீயப் பெறுராசை யோன்கொங்கு மண்டலமே