நிலத்தில் வைத்திருந்த
கமண்டலத்தைக் கவிழ்த்தனர். உள்ளடங்கியிருந்த
காவேரி நதி நிலத்திற்பட்டுப் பெருக்கெடுத்துச் சீகாழி வழிச்சென்றது.
(மேற்)
கொங்குறு
முனிவன் பாங்கர்க் குண்டிகை மீதிற்பொன்னி
சங்கர னருளின் வந்த தன்மையும் புணர்ப்பு முன்னி
ஐங்கரன் கொடியாய் நண்ண அகத்திய னவனென் றோரான்
இங்கொரு பறவை கொல்லா மெய்திய தென்று கண்டான்,
என்னலுங் காஞ்சி தன்னி லெம்பிரா னுலக மீன்ற
அன்னைத னன்பு காட்ட வழைத்திட வந்த கம்பை
நன்னதி போல விண்ணும் ஞாலமும் நடுங்க வார்த்துப்
பொன்னியா றுலகந் தன்னிற் பொள்ளெனப் பெயர்ந்ததன்றே.
(காந்தம்
காவிரி நீங்குபடலம்)
|
ஆனைமுகனைத்
தொழுவோர் குட்டிக்கொள்ளல்
9.
|
ஐங்கைப்புத்
தேளைத் தொழுகின்ற பேர்க ளகங்கசிந்து
செங்கைத் துணைமுட்டி யாய்த்தலை யிற்குட்டிச் சீர்பெறுநற்
றுங்கப் பணிவிடை முற்றோன்று தானஞ் சுரர்மகிழு
மங்குற் பொழிறிகழ் காவேரி சேர்கொங்கு மண்டலமே. |
(க-ரை)
விநாயகக் கடவுளை வணங்குவோர், தலையிற்
குட்டிக்கொள்ளுங் கொள்கையானது, முதலில் உண்டான இடமான
கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு
:- காவிரி நீர் அடங்கிய கரகத்தைக் கவிழ்த்து ஓடிய
காக்கை, சிறுவனாக நிற்கக்கண்டு, புடைத்தற்காக, அகத்தியர் பின்தொடர்ந்து,
பின் விநாயகர் எனத்தெரிந்தனர். அறியாது குட்டுதற்காக அடிகளைத்
தொடர்ந்த என் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும். அக்குட்டு எனக்கே
ஆகுக என இருகைகளையும் சேர்த்து அகத்தியர் குட்டிக்கொண்டனர்.
இதுபோலக் குட்டிக்கொண்டு பணிவோர் வணக்கத்திற்குப் பெரிதும்
மகிழ்ந்தருளல் வேண்டுமெனத் துதித்தனர். அவ்வாறே அருள்புரிகின்றனம்
என்ற வரத்தை விநாயகக்கடவுள் கொடுத்தனர். ஆனதால் குட்டிக் கொண்டு
வணங்கும் வழக்கம் முதலில் கொங்கு நாட்டில் நிகழ்ந்தது.
|