80

ஆர்க்கலாஜிகல் வருஷாந்த ரிபோர்ட்டிலும் காஞ்புரத்துக்கடுத்த
ஆரம்பாக்கத்து கோயிற் சாசனத்திலும் இப்படையெடுப்பு எழுதப்பட்டுள்ளது.

     இந்த சண்டை கி.பி. 1190-ல் நடந்ததெனச் சாசன பரிசோதகர்கள்
கணிக்கிறார்கள். எனவே இன்றைக்கு 730 வருஷங்களாகின்றன. இவன்
மரபினர் பேரூர், அவிநாசியிலும் திருப்பணி செய்திருக்கிறார்கள்.

     இம்மரபினர் கோயமுத்தூர் ஜில்லாவில் புரவிபாளயம் (பாளயப் பட்டு)
ஜமீன்தாராக இருக்கின்றனர். இவர்களைப் பாண்டிய ராஜாங்கத்தார்
புத்திரவர்க்கமெனக் கொண்டு பல உரிமைகள் செய்திருக்கிறார்கள்.
விஜயநகரம், மஹிசூர், மதுரை நாயக்கர் சமஸ்தானம், மலையாள
சமஸ்தானங்களிலும் பல கவுரவங்கள் பெற்றிருக்கிறார்கள். கள்ளிக்கோட்டை
ஆமீன் சாய்புக்குஞ், சீரங்கபட்டணம் நபாபுக்கும் நடந்த வாளையாற்றுச்
சண்டையில் வழி மறிக்கப்பட்டது. அக்காலத்திற் புதியவழியை வெட்டிக்
காட்டியதால் சந்தோஷப்பட்ட நபாபு உம்பளமாகச் சில கிராமங்கள்
உதவினான்.

     இம்முடி - மன்றாடி என்பன முதலிய பழய காலத்துப் பட்டங்களைப்
பெற்றிருக்கிறார்கள். 'இம்முடி' ஜகமண்டலாதிபதி கோப்பண மன்றாடியார்
என்பது இப்பொழுதுள்ளவர் பெயர்.

     களந்தை = வாரக்க நாட்டிலுள்ள ஓரூர்.

பூவலர் = பூவலியர் - ஒரு ஜாதி. பூலுவரென்பாரு முளர் இவர்கள்
குருகுருப்பிரிவினுள் பூவலியர் - மாவலியர் - காவலியர் - வேட்டுவர்
வேடர் எனும் பஞ்சவருண வாளரச வகுப்பினர் என்பர்.

               நாணிக்கண் புதைத்தல் துறை

பம்பிடச் சிங்களர் தென்னர் களிக்கப் பணுங் களந்தைக்
கம்பக் கரிக்கோப் பணன்வரை யீர்வேள் கலாபத்திலே
செம்பொற் குடத்தைப் பவளத்தை முத்தைத் தெரியவிட்டு
அம்பைப் புதைத்துவைத் தீரிந்த வெண்ண மறிந்திலனே.

                                        (கோவை)

                   வேதாந்த தேசிகர்

60.



படிபுகழ் தேசிகர் கச்சியி னொந்து பகரவொண்ணா
வடகொங்கு வானி நதிதீரச் சத்திய மங்கலத்திற்
குடிபுகுந் தாய்ந்து பரமத பங்கங் குலவுவொண்ணூல்
வடிதமி ழாற்சொலத் தேறிய துங்கொங்கு மண்டலமே.