62.
|
செய்தவ
மோங்கிய சீரார் கபிலநற் றேவரன்பிற்
பெய்த வமுத சுவைகொ ளந்தாதியிற் பீடுபெறச்
செய்தவ மாச்சிவன் மேயசெங் குன்றூர் செபிக்குமெனு
மைதவ ழப்பதி யோங்குவ துங்கொங்கு மண்டலமே. |
(க-ரை)
தவப்பேற்றினையுடைய கபிலதேவ நாயனார் திருவாய்
மலர்ந்தருளிய அமுது பொதிந்த, சிவபெருமான் றிருவத் தாதியினுள்ளே
சிவன்மேய செங்குன்றூர் எனக் கூறிய திருச் செங்கோடுங் கொங்கு
மண்டலம் என்பதாம்.
வரலாறு
:- பெரிய புராணத்துள் பொய்யடிமையில்லாத புலவர்
எனப் புகழ்ந்து கூறப்பட்டுள்ள கூட்டத்துள் ஒருவர், கபிலதேவ நாயனார்.
இந்நாயனார் மனங்கசிந்து சிவபிரான்மீது தமிழ்ச் சுவையும் சிவமணமும்
நிறைந்த தமிழ்நூல்கள் பாடியுள்ளார். இவர் அருளிய நூல்கள் மூத்தநாயனார்
இரட்டை மணிமாலை, சிவபெருமான் இரட்டைமணி மாலை, சிவபெருமான்
றிருவந்தாதி. இவை பதினோராந் திருமறையுட் சேர்ந்திருக்கின்றன. அவற்றுள்
சிவபெருமான்றிருவந்தாதியில் 'சிவன் மாட்டுகவெழுதும்' என்னும்
திருவெண்பாவில் சிவன்மேய செங்குன்றூர் எனக் கூறியுள்ளார்.
சிவபெருமான்
றிருவந்தாதி
(மேற்)
சிவன்மாட் டுகவெழுது
நாணுநகு மென்னுஞ்
சிவன்மேய செங்குன்றூ ரென்னுஞ் - சிவன்மாட்டங்
காலிங் கனநினையு மாயிழையீ ரங்கொன்றை
யாலிங் கனநினையு மாறு. |
சித்தன்
வாழ்வு
63.
|
நெல்லுங்
கரும்புங் கமுகும் பலன்றர நேர்பருவச்
செல்லம் பரத்திதிசைப் துப்பொழிந் தோங்கிடு சித்தனல்வாழ்
வில்லந் தொறுமூன் றெரியிடைத் தென்ன வெலாக்கலையும்
வல்லதனியௌவை கூறிய துங்கொங்கு மண்டலமே |
|