85

               நல்லதம்பிக் காங்கேயன்

64.



அம்புவி மெச்சுகுன் றத்தூரி லாயரி லாய்கலைதேர்
எம்பெருமானைக் கொடுதக்கை யென்னு மிசைத்தமிழால்
நம்பு மிராம கதையையன் பாக நவிலவிசை
வம்பவிர் தார்ப்புய னல்லயனுங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) குன்றத்தூரான சங்ககிரி துர்க்கத்தில் இடையர்
குலத்திலுதித்துச் செந்தமிழ்ப் புலமை வாய்ந்த எம்பெருமான் என்னும்
கவிராயனைக் கொண்டு இசைத் தமிழில் இராமாயண கதையை இயற்றுவித்த
நல்லதம்பிக் காங்கேயனுங் கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு :- சங்ககிரி துர்க்கத்தில் இடையர் குலத்தில்
எம்பெருமான் என்று ஒருவித்துவான் இருந்தனர். அவர் இளமையில்
மதுரை திருநெல்வேலி இடங்களிற்றங்கித் தமிழ் நன்கு பயின்றனர்.
தெய்வபத்தியுள்ள பெரியோர்களது அன்பின் கனிவை வியந்து பாராட்டுவர்.
இதனால் இவரை பத்தர்ப்பாடி என்றழைத்தனர். மதுரையிற் கல்வி
கேள்விகளிற் சிறந்த பூங்கோதை என்னும் நற்குண மாதினை மணந்தனர்.
அப்பொழுதுள்ள பாண்டிய அரசன் சமுகத்திருந்தனர். பின்பு ராஜ்ஜியம்
நாயக்கர் வசமாயிற்று என்றாலும் பெரிய கிருஷ்ணப்ப நாயக்கர் அரசரான
காலத்து அவராற் பெருமதிப்புற்று வாழ்ந்தனர். வேந்தனிடம் விடைபெற்றுத்
தான் பிறந்த ஊருக்கு வந்தனர். இவ்வூர் கொங்கு இருபத்து நான்கு
நாட்டிற்கும் தலைமையாய் ஏழு சுற்றுக் கற்கோட்டையுள்ள கடிஸ்தலமாய்,
இம்மண்டலத்தில் அரசிறை கொடாதவர்கள் முதலிய ராஜாங்கக் குற்றஞ்
செய்தவர்களைச் சிறை வைக்கும் அரணுள்ள இடமாயுள்ளது. மற்றைச்
சிற்றரசர்கள், பாளயக்காரர்கள் பட்டக்காரர்கள் முதலினோர் நாயக்கர்
சமஸ்தானப் பிரதி காவலரை அடிக்கடி காணவருவார்கள்.
இராமாயணத்துள்ள உள்ளுறைகளை வெகு விநயமாக இப்புலவர்
விளக்குவராகலின் எல்லோரும் தேன்றுளியை மொய்த்த ஈபோலச் சூழ்ந்து
கேட்டு மகிழ்வர். நம் கொங்கு நாட்டில் ஒரு ராமாயணஞ் சுருக்கமாகச்
செய்விக்க வேண்டு மென்று ஆசைப்பட்டார்கள்.

     கீழ்கரைப் பூந்துறை நாட்டு அதிபனாக மோரூரில் நல்லதம்பிக்
காங்கேயன் என்னும் பெருந்தகை இசையுடன் இருந்தனன். இக்கவிராயரும்
சங்ககிரி மோரூர்க் காணி பூமியுடையவராதலின் உழுவலன்புடையவராக
வாழ்ந்தனர். சோழமண்டலம் போலக்