87

     இதனால் இவர் காலம் கி.பி. 1599 - 1600 ஆகிறது, இவரது மூதாதை
திருமலை காங்கயனுடைய சாசனம் ஒன்று சித்தளந் துரிலகப்பட்டது. அதனை
இங்கே கொடுக்கிறேன்:

............................................................................................................. மெல் செல்லா
நின்ற சுபானு வருஷதி கார்த்திகை மாசம் 23தீ பௌணமையும்
நாயற்றுக்கிழமையும் பெற்ற புண்ணிய காலத்திலே ஸ்ரீ மன் ராசாதிராசன்
ராசபரமெசுரன் ராசமாத்தாண்டன் ...................................................... எம்
மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ விரபிரதாபர் கிருஷ்ணராயர் மஹாராயர்
பிறுதுவி ராச்சியம் பண்ணியருளா நின்ற காலத்து முளவாய் சாந்த
எயிநூர்ச்சாவடி செங்கோல் செலுத்தும் திறியம்பக உடையார் காரியத்துக்கு
கடவரான சாம நயனார்க்கு நடக்கிற காலத்தில், எழுகரைப் பூந்துறை
நாட்டு மோரூரில் திருமலை காங்கயன் சீமையான சிற்றளுந்தூரில் என்
காண்சொத்தில் (No. 138 - 1915).

                   பூங்கோதையார்

65.



குறுமுனி நேர்தமி ழாழியுண் வாணர் குழாம் வியப்ப
அறிவி லிளைஞரே யாண்மக்க ளென்ன வறுதியிட்ட
சிறிய விடைச்சியெம் பெருமான் மனைவி சிறந்து வளர்
மறுவறு சங்க கிரிசேர் வதுகொங்கு மண்டலமே.

     (க-ரை) தமிழ்க்கடலையுண்ட அகத்திய முனி போன்ற பல
புலவர்கள் வியக்குமாறு அறிவிலிளைஞரே ஆண்மக்கள் என்று முடிவு
கூறிய எம்பெருமான் கவிராயரது மனையாட்டியார் வாழுஞ் சங்ககிரியுங்
கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு :- தக்கையிசை ராமாயண மியற்றிய எம்பெருமான்
கவிராயரது மனைவியார். பூங்கோதை யென்னும் மங்கையர்க் கரசியராவர்.
ஒருநாள் புலவர் பெருமானைப் பார்க்கச் சில வித்வான்கள் அவர்
மனையை யணுகினர். கவிராயர் வெளியிற் சென்றிருந்தனராதலின் வந்தோர்
சல்லாபஞ் செய்து கொண்டிருந்தனர். அவற்றுட் பெண்கள் எவ்வளவு
கற்றுணர்ந்தவர்களாயினும் முதிர்ந்த அறிவு பெறாதவர்களென்பதாய்ப்
பெண்மக்களை இழித்துப் பேசினர். இதனை அம் மனையுளிருந்து
கேள்வியுற்ற இந்நங்கையார் பொறாராய் ஒரு வெண்பா எழுதிய சிறு
சீட்டை ஒரு சிறுமி வசமனுப்பினர்.