89

         சம்பந்தச் சர்க்கரை - தமிழ்ப்புலவனுக்குத்
     
             தாலியைக் கொடுத்தது

66.



சங்க கிரிதுரு கத்திற் சிறையினிற் சார்ந்திடுநாள்
சங்கையி லாதொரு பாவாணன் சென்று தமிழுரைக்க
அங்க ணிருந்துத னில்லாள் கழுத்தி லணிந்திருக்கும்
மங்க லியந்தனைப் பெற்றளித் தான்கொங்கு மண்டலமே.

     (க-ரை) சங்ககிரித்துருகத்தில் அரசாங்கச் சிறையில் இருக்கும்
பொழுது, ஒரு புலவன் வந்து தமிழ் பாடினான். (வேறொன்றுங் கொடுக்க
இயலாமையால்) தன் மனையாட்டி அணிந்திருந்த திருமங்கலியத்தை வாங்கி
அப்புலவனுக்குக் கொடுத்த சர்க்கரையுங் கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு :- அரசாங்கக்தினருக்குச் செலுத்த வேண்டிய இறைவரி
செலுத்தத் தவறின பல பாளையக்கார்களை மதுரைத் தளவாய் ராமப்பய்யர்
சங்ககிரி துர்க்கக் கோட்டையில், சிறை வைத்திருந்தனர். அந்நாளில் ஒரு
தமிழ் வித்துவான் ஆணூருக்குப் போய்ச் சம்பந்தச் சர்க்கரை மன்றாடியைப்
பார்த்தார். சிறையிலிருப்பது கேட்டு நேரே சங்ககிரி துர்க்கத்துக்கு வந்து
வாயில் காவலர்க்கு இதங்கூறிச் சிறைச்சாலையுள் புகுந்தார். பல கண்ணிய
புருடர்களிருந்தார்கள். கவிபாடி வந்த புலவரைப் பார்த்து ஐயா, புலவரே
பரிசுபெறுகின்ற இடம் இதுதானா? விடுதலையாய் மகிழ்ச்சி பெறுங்காலத்திற்
கேட்கலாகாதா? எனச் சிரித்தார்கள். அப்பொழுது அக்கவிராயர்.

                       (மேற்)

எவரையென்று நாமறிவோ மிரப்பவனோ இடமறியா
                              னிரவில்வானங்
கவருமதி யொருபுறத்தே நிலவெரிக்கும் பான்மைதனைத்
                                 கண்டிலீரோ
அவரைபத மாகுமுனங் கடுகுபொடி யாகிவிடு
                              மதனையோர்ந்து
துவரைமுதற் கரதலனாஞ் சம்பந்தச் சர்க்கரையார்
                                 சொல்லுவீரே

                                   .(தனிக்கவி)

என்றவுடன் சர்க்கரை மன்றாடியார் தமிழ்வாணரை இருகையாலுந்
தழுவிக்கொண்டு, இக்காவற் கூடத்தில் என்னைப்பார்க்க மிகுந்த
சிரமப்பட்டிருப்பீர்களே என்று கண்ணீர் ததும்ப உளங்