91

               ஒருபுலவன் ஆணூாக்காமிண்டனை
     
                விற்க விலை கூறியது

67.



கொடையிற் பெரியோ யுடனே யெனக்குக் கொடாமையினாற்
கடையிற் பெறநினை விற்றென் கலியைக் கழிப்பனென
மடியைப் பிடித்திழுத் தேவிலை கூறிய வாணன்மிடி
வடியப் பொருடந்த காமிண்டனுங் கொங்கு மண்டலமே.

     (க-ரை) ஈகையிற் சிறந்தோனே, கேட்டபொழுதே நீ பொருள்
உதவாமையால், உன்னைக் கடைத்தெருவில் விலைகூறி விற்பேன்
வாவென மடி பிடித்திழுத்த புலவனது வறுமை போகும்படி பொன்னுதவிய
காமிண்டனுங் கொங்குமண்டலம் என்பதாம்.

     வரலாறு :- சிவதல வழிபாடாகச் சர்க்கரை சென்றிருந்தனர்.
அங்கே ஒருபுலவர், இவரைச் சந்தித்துத் தனக்குக் கடன் இருப்பதாயும்
அந்தத் துன்பத்தை நீக்க வேண்டுமென்றுங் கேட்டுக் கொண்டார்.
யாத்திரை தீர்ந்து பதினைந்து தினத்துள் ஊர் சேர்வேன், தயவு செய்து
வருவீர்களானால் உதவுகிறேன் என்றனர். பதினைந்தாவது நாள் நத்த
காரையூர்க்குப் போய் விசாரித்தார். இன்னும் கொடையாளி வந்து
சேரவில்லை எனத் தெரிந்தார். உடனே புறப்பட்டுப் போனார். கரூரிலே
இருக்கக்கண்டா! உன் வார்த்தையை நம்பி என் கடன்காரனுக்குக்
கொடுப்பதாகச் சொன்னேன். சொன்ன வாய்தாக் கடந்து மூன்று
நாளாகிறது பணங்கொடு என்றார் புலவனார். ஊருக்குப் போகலாம்
வாருங்கள் கொடுக்கிறேன் எனவே கோபம் பிறந்து, இப்படித்தானோ
கொடை வன்மை. உன்னை நான் இவ்வூர்க் கடைவீதியில் விலைகூறி
விற்பேன் என மடியைப்பிடித்து இழுத்த புலவரது உறுதிப்பாட்டுக்கு
மகிழ்ந்து அவருக்குள்ள கடன் தொகை தெரிந்து மகிழ்ச்சியோடு உதவினர்
என்பர்.

மற்றோர் புலவன் மடிமேற்கை போட்டிழுத்து
விற்றா லல்லாதென் வெறுமை நோய் தீராதே
எங்கும் விலைகூற வேயிசைந்த புண்ணியவான்
எங்குங் கனகாபி ஷேகமாகப் பொழிந்தோன்

                                   (நல் - காதல்)

     மேற் செய்யுளின் கடையடியில் காமிண்டன் என்றிருக்கிறது. இதைப்
பழைய கோட்டைக்காரர் பரம்பரையார் ஒவ்வொருவரும்