இந்த
நத்தக் காரையூர் - (திரிபுவனமாதேவிபுர) சிவாலய
சிலாசாசனத்தில் (பராபவ) அழகன் உத்தமச்சோழக் காமிண்டன் என்றும்,
காங்கேய நாடு - கவுண்டன் பாளத்துள்ள சக 1715 கலி 4794 - ல்
சிவமலைக்கு 15 வள்ள நிலதான சாசனத்திலும், அரசன் பாளயத்துள்ள,
சக 1715 வருஷத்து சாசனத்திலும் திருச்செங்கோடு கந்தன் சர்க்கரை
சாசனத்துள்ளும் காமிண்டன் என்றுபெயர் வருகிறது.
இராமநுஜர்,
கொங்குப் பிராட்டியார்
68.
|
சிவனே
பரம்பிறி தில்லையெ னாதாற் சிரந்துணிக்க
உவந்தனன் சோழ னெனமறு வேடமா யோடிவந்து
கவன்றிடி ராமா நுஜன்றனைத் தேற்றியுங் காத்தளித்த
மவனகைக் கொங்குப் பிராட்டிய ருங்கொங்கு மண்டலமே. |
(க-ரை)
சிவபெருமானே பரம் (துரியமூர்த்தி) வேறு இல்லை?
எனக்கையெழுத்துப் போடாவிடின் சோழன் கழுத்தை வெட்விடுவானென்று,
பயந்து வெளியேறி வந்த ராமாநுஜரது பயத்தை நீக்கி, ஊண் உடை முதலிய
ஆதரவு செய்த கொங்குப் பிராட்டியாருங் கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு
: திரிபுவன சக்கரவர்த்திகள் என்றும், சுங்கந் தவிர்த்த
சோழன் என்றும், பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன் என்றும் கூறப்படும்
குலோத்துங்க சோழன் (1) என்பான் மிகுந்த பராக்கிரமசாலியும், கல்விமானுஞ்
சிறந்த தெய்வபக்தியுமுள்ளவன். இவன் வேண்டிக் கொள்ளவே சேக்கிழார்
பெரியபுராணம் பாடினார். கி.பி. 1070 - ல் பட்டந்தரித்து 1119 வரை அரசு
புரிந்தான். இராமாநுஜர் காலமும் இதுதான். இச்சோழவேந்தன் முன்னிலையில்
சைவ வைஷ்ணவ சமயவாத சபை ஒன்று வித்வான்கள் ஏற்படுத்தினார்கள்.
அதில் வைஷ்ணவர்கள் தோல்வியடைந்ததால் "சிவாத்பரேதரம் நாஸ்தி"
என்றெழுதிக் கையெழுத்திட வேண்டுமென்று தீர்மானித்தார்கள். இந்தச்
சபைக்கு இராமாநுஜரும் வரவேண்டு மென்று முடித்திருக்கிறார்கள்.
இதனையறிந்த நடாதூராழ்வார், உடையவர் பாலணுகி விவரமறிவிக்கும்
பொருட்டு, நடாதூராழ்வாரிடம் சொன்னார். கூரத்தாழ்வார் உடையவரிடம்
அரசன் வஞ்சகனாக இருக்கிறான், தேவரீர் சபைக்கு எழுந்தருளுவது
யுக்தமன்று நான் போய் வருகிறேனென்று, உடையவருடைய திரிதண்ட
காஷாயாதிகளைத் தரித்துக்கொண்டு ராஜ
|