பிரபந்நாம்ருதம்
கிரிமி
கண்டன் காரணமாய், ஸ்ரீரங்கத்தை உடனே விட்டு,
மேற்றிசையில் மேன்மையான கொங்கு தேசத்தை அடைந்த உடையவர்,
வேட்டுவர்களின் உபசரணையை ஏற்றுக்கொண்டு தெய்வச் செயலால்
ஏழாவதுதினம் *சேலாஞ்சலாம்பா (கொங்கு பிராட்டியார்) இல்லத்தை
அடைந்தனர்.
உடையவர்
கொங்குப் பிராட்டியாரது பேராதரவால், அரங்கநாதன்
சேவை பெறாத துக்கமுமகன்று, சிஷியர்களுடன் சௌக்கியமாகச் சிலநாள்
அவர் திருமனையிலேயே வசித்தனர். (இவர் பதிகொங்கிலண்ணன் -
கொங்கிலாச்சான் எழுபத்துநான்கு வைணவ சிங்காசனாதிபதிகளில் ஒருவர்)
விருத்தன்
குமரனானது
69.
|
உலையி
லமுது படைத்துண்டு சீட னொளித்திருப்பத்
தலையின் மயிருங் கருக்கக்கண் டேயவன் சற்குருவும்
நிலையுடன் கக்குவித் துண்டடைந் தானன் னெறியிற் கஞ்ச
மலையி லதிசயங் கண்டது வுங்கொங்கு மண்டலமே. |
(க-ரை)
உலைவைத்துச் சமைத்துச் சாப்பிட்டுத் தன்
(உருவமாறிவிட்டதால்) சீடனது முன்னுருத் தெரியாது நரைதிரை
மாறியிருக்கக் கண்ட அவனது சற்குரு. தன் சீடனருந்தியிருந்த
உணவைக் கக்கச்செய்து, அதனையுண்டு பாலனான,* கஞ்சமலையுங்
கொங்குமண்டலம் என்பதாம்.
* சேலஅஞ்சல
= முன்றானை - அது தெலுங்கில் கொங்கு. அம்பா =
லக்ஷ்மீ = அது பிராட்டி. பிரபந்நாம்ருத மியற்றியவர். தெலுங்கர்; ஆதலின்
கொங்கு என்னும் பதத்துக்குச் சேலாஞ்சல எனக்கொண்டார்.
*
கஞ்சமலை - சென்னை இருப்புப்பாதை மகடஞ்சாவடி, அரியானூர்
ஸ்டேஷன்களின் அருகிலிருக்கிறது. திருச்செங்கோடு தாலூகா. பருத்திப்
பள்ளிநாடு.
|