99

எற்று திரைப்பொன்னி கூடுறு வானி யிடைமடங்க
வெற்றி மிகுத்த அதிவீர பாண்டிய வேந்தமைச் சன்
கற்ற வறிவினன் காளிங்க ராயன்செய் கால்கழிநீர்
உற்ற வனத்தை வனவயலாக வுயர்த்தியதே

                                   (தனிப்பாட்டு)

     இந்த வீரபாண்டிய அரசன் கொங்கு நாட்டை ஆண்டிருக்கிறான்
என்பதை விஜயமங்கலம் முதலிய இடங்களிலுள்ள கல்வெட்டுகளும்
எபிகிராபி 1913 - 14 வருஷாந்த ரிபோர்ட்டும் நன்கு விளங்கும். கி.பி.
1250-க்கு மேல் 1280 வருஷங்களுக்கு இடையில் இவன் இருந்திருக்கிறான்.

     1913-ம் வருஷம் ஊற்றுக்குழி ஜமீன் மானேஜர் ஸ்ரீமான்
J.M. துரைசாமி பிள்ளையவர்கள் இங்கிலீஷில் எழுதி அச்சிட்டுள்ள ஜமீன்
சரித்திர புத்தகத்திலும் அதில் அநுசரித்த கோயமுத்தூர் ஜில்லா மானியுள்
முதலிய ஆங்கில சரித்திரங்களிலும் காளிங்கராயன் என்ற
பெயர்க்காரணமும் அணைக்கட்டு விவரமும் இதற்கு முரண்படுகின்றன.
அவைகள் எந்த ஆதாரத்தின் மேல் எழுதியனவென்று விளங்கவில்லை.

                      மாளவராயன்

     காங்கேய நாட்டு மயிலிரங்கம் வைத்தியநாதர் கோயில் சாஸனத்தில்,

     " ...... காணியாளர் காவிலவரில் பிறை சூடி வீரப்பெருமாள்
ரோகாவும், வேளாளர் ஆந்தைகளில் சேருமா பிறவியாரும் மாடைகளில்
மாளவராயர் அவிகை மழவராயரும் ..... " என்றிருப்பதாலறியக் கிடக்கின்றன.

     கொங்கு மண்டலத்தில் கோயில் பூஜை ஊழிய முதலியன
செவ்வனே நடந்தேறுதல் பொருட்டு, விட்டமானியம் முதலிய பல சாசனக்
கல்வெட்டுகளில் காளிங்கராயன் என்று கையெழுத்திடப் பெற்றிருப்பவை
பல காணலாம்.

                     தொண்டை மான்.

71.



பண்டைய நாளிலொன் னார்பஞ்சு போலப் பறந்தகலத்
திண்டிறல் காட்டிய காளையை நோக்கியச் செம்பியனுந்
தொண்டைமா னென்றுந் தனதுநற் பேருந் துரைத்தனமு
வண்டரை மீதினிற் பெற்றவ னுங்கொங்கு மண்டலமே.