தொடக்கம்
11-20 வரை
மூவேந்த ரிற்றன் னுடனிருந் தானென
முன்முகிலைத்
தேவேந் திரன்றா னிருவர்க்கும் நல்கிடத் தென்னவனாம்
பூவேந்தன் மேகம் விலங்கிடும் போது புயற்குப்பிணை
மரவேந்தன் முன்சொன்ன வேளாளர் பாண்டியன் மண்டலமே.
(11)
காரூர் புயற்குப் பிணைசொல்லிக் கீர்த்திக்
கவிதைகொள்ளும்
நீரூ ருவக்குங் காரினைக் காத்த நெறிமுறையின்
நேரூறு மன்னவ னுத்தர தேசத் தகன்றிருக்கும்
வாரூறு மங்கல வேளாளர் பாண்டியன் மண்டலமே.
(12)
அரனடி யார்க்கமு திட்டவ ரெச்சி லருந்துகின்ற
வுரனுடை யாரவ்வே ளாளர் மகிமையுண் டாக்குஞ்சொக்கப்
பரனரு ளால்நிலை யாகிய கோட்டயம் பாரிலுள்ள
மரபவர்க் கன்னங் கொடுத்தாரும் பாண்டியன் மண்டலமே.
(13)
உழுதொழி லொன்றியல் பாகவே கற்றிவ்
வுயருலகில்
தொழுவது தானுந் தொடருந் தொழிலுந் துவர்க்குமென்ன
வெழுபெருங் கூற்றத்து வேளாள ரென்றுல கேழும்வென்று
பழுதற நற்குடி யாய்வாழ்வர் பாண்டியன் மண்டலமே.
(14)
ஈட்டுங் கொடிய அரசர்கள் போர்செய்
திடினும்நதி
மேட்டிற் புகுந்துவந் தூர்புகுந் தாலும் மிகவுயர்ந்த
கோட்டையை விட்டு வெளியே வராரென்று கூறுகின்ற
வாட்டமி லாதுறை வேளாளர் பாண்டியன் மண்டலமே.
(15)
பொருந்திய சீவில்லி புத்தூரின் மேவிய
புண்டரிகத்
திருந்தரு ளேசெய் திடுநாச்சி யாரம்ம னென்பவரைத்
தரும்பெரும் பொன்மதிச் சீர்க்கரு ணைப்பெயர் தாங்குகின்ற
வரும்பெரு மேன்மைகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே.
(16)
வீசிய தென்றற் றமிழோ டுலவும் வியன்மதுரை
ஈசன்செங் கோல்செயு மாகீர்த்தி பாண்டிய னின்பமுறத்
தேசியும் யானையுந் தேருங் கொடுத்துத் திருமுடிமேல்
வாசிகை யும்புனை வேளாளர் பாண்டியன் மண்டலமே.
(17)
நந்தேறும் வாவிப் பெருந்துறை யெல்லை
நமக்கெனச்சொ
லிந்தேறு செஞ்சடை யெம்மா னுடனெதி ரேற்றுக்கொண்டு
செந்தே னொழுகும் பொழில்மது ராபுரித் தென்னவன்முன்
வந்தே வளஞ்சொலும் வேளாளர் பாண்டியன் மண்டலமே.
(18)
பரத்தினி
லேயுயர் வாகிய பார்மகிழ் பங்குனியுத்
திரத்திரு நாளினில் மேலைச் சிதம்பரத் தேநயமாய்த்
துரைத்தன மாகச்செய் கல்யாண மண்டபம் சொர்ணநவ
இரத்தினத் தாற்செய்த வேளாளர் பாண்டியன் மண்டலமே.
(19)
அன்புறப் பார்முழு தும்முழு தேபயி ராக்கிமுதிர்ந்
தின்புறத் தான்விளை நெல்லொடு தானிய மீட்டியவை
தென்புலத் தார்தெய்வ மொக்கல் விருந்தொடு தென்னவனா
மன்பெறத் தந்தருள் வேளாளர் பாண்டியன் மண்டலமே.
(20)