தொடக்கம் |
51-60 வரை
|
|
|
அலைவைத்த வையைத் திரைச்சீத னத்தையு
மள்ளிக்கொண்டு
குலைவைத்த தண்ணறுந் தாதலர் பூமணங் கொள்ளைகொண்டு
நிலைவைத்த சந்தன வாசமும் வாரி நிலவுதென்றல்
மலயத் தமழ்மண மேவீசும் பாண்டியன் மண்டலமே.
|
(51) |
|
|
|
|
|
|
|
மடலுற்ற புட்ப மணிநாச்சி யாரம்மை மாமணஞ்செய்
திடமிக்க வாசை யுடனே புதுவையிற் சென்றுமென்றே
யடல்பெற்ற வேங்கடத் தாருமன் னாரு மழகருந்தென்
வடபத்ர சாயியுந் தாமமர் பாண்டியன் மண்டலமே.
|
(52) |
|
|
|
|
|
|
|
பாலினும் வெண்ணெ யினுந்தயிர் மீதினும்
பட்சம்வைத்த
வேலினுங் கூரிய கண்ணா ளகோதைதன் வீட்டிடத்தே
ஆலினும் வேலையி னுந்துயில் சங்கத் தழகரெனு
மாலிருஞ் சோலை மலையாரும் பாண்டியன் மண்டலமே.
|
(53) |
|
|
|
|
|
|
|
பந்தா முலையுமை தாயென வாரிதன் பால்முழுகத்
தந்தீரம் விட்டுக் கடவாத வாரிதி தானைமுன்னம்
செந்தே னொழுகுங் கடம்பா டவியில் திருக்குளத்தில்
வந்தே யெழுகட லானதும் பாண்டியன் மண்டலமே.
|
(54) |
|
|
|
|
|
|
|
கானம் புனையும் நெறியுழி மாறன் கருவைப்பெருந்
தான தருக்கள் நிறைந்தபால் வண்ணநா தப்பரனைத்
தேன்மொண்டு மொண்டபி டேகஞ்செய் போது திருவுருவாய்
மான்மழு வோடெதிர் காட்டிடும் பாண்டியன் மண்டலமே.
|
(55) |
|
|
|
|
|
|
|
அரைசிலை யொன்று புனல்வீழ மீனு மணைக்கரையில்
தரைமிசை பாதியப் பட்சியு மாகியத் தண்ணியநீர்க்
கரைமிசைப் பாதியப் பட்சியு மீனுங் கவர்ந்திருக்கும்
வரைசெய் திருப்பரங் குன்றமும் பாண்டியன் மண்டலமே.
|
(56) |
|
|
|
|
|
|
|
அதிகார மாகச்சொக் கேசரைப் பூசைசெய்
தானைநர
பதியான மெய்கண்ட சைவ சிகாமணி பக்தியினால்
விதியாகப் பூசித்த வேளாளர்க் கேவெள்ளை நீறளித்த
மதியா மதுரா புரியது பாண்டியன் மண்டலமே.
|
(57) |
|
|
|
|
|
|
|
திருவாய் மொழித்திரு மேனிய ரானதுஞ்
செந்தமிழா
லொருநான் மறையென வோதிய பாடல்கொண் டோங்குபதி
யிருநாலு பத்து முடைத்தாகி யெண்டிசை யேற்றம்பெற்று
வருமால் திருப்பதி யுள்ளதும் பாண்டியன் மண்டலமே.
|
(58) |
|
|
|
|
|
|
|
செகத்தினில் பஞ்சம் வரவே யருச்சனை
செய்கையிலே
புகழ்த்துணை யார்திருப் புத்தூர்ச் சிவன்முடி மேல்புடைக்க
வகத்துணை யாகப்பெற் றேபடிக் காசொன் றளித்துவரும்
மகத்துவ மானாரும் வேளாளர் பாண்டியன் மண்டலமே.
|
(59) |
|
|
|
|
|
|
|
கரைபெற்ற தோர்பஞ்ச லட்சண மானதொல்
காப்பியமுந்
தரைமுற்றும் போற்றிய சிந்தா மணியுந் தமிழ்ச்சங்கத்தில்
நிரைபெற் றுயர்பத்துப் பாட்டும் விளங்க நிசவுரையை
வரைநச்சி னார்க்கினி யார்வாழ்வு பாண்டியன் மண்டலமே.
|
(60) |
|
|
|
|
|
|