தொடக்கம் |
71-80 வரை
|
|
|
ஒள்ளிய மாயனும் வேதனு மெய்திட வும்பர்தொழுந்
துள்ளிய மான்மழுக் கையர்நின் றாடத் துதிபெருகுந்
தெள்ளிய சித்ர சபைவெள்ளி யம்பலம் சீர்மருவும்
வள்ளிய தாம்ர சபைமூன்றும் பாண்டியன் மண்டலமே.
|
(71) |
|
|
|
|
|
|
|
மீனவன் வேதியர் பங்கைத் தடுக்க விரைந்தநுமான்
றானுள நொந்து மனுவிறந் தானென்று தண்டமிழைக்
கோனுள மெச்சக் கொடுத்துத்தம் பங்கினைக் கொண்டுமகிழ்
வானர வீரன் மதுரையும் பாண்டியன் மண்டலமே.
|
(72) |
|
|
|
|
|
|
|
சொல்லிய மங்கைக் கரசியார் கொங்கைத்
துணையழுந்திப்
புல்கி மணஞ்செய்து நேரியன் போர்வென்று பூதியணி
நெல்லையில் வாழ்கின்ற சீர்நெடு மாறர்தம் நேசம்வைத்து
வல்லியங் காத்துப் புரந்தவர் பாண்டியன் மண்டலமே.
|
(73) |
|
|
|
|
|
|
|
அரிணம் பெறும்விழித் தேன்மொழி யாளபி
ராமியம்மை
தருணம் வரநலத் தண்டீசர் கண்ணொளி தான்சிறக்க
வருணன் பரிவோ டிடியும் மழையும் தாய்வரவத்
திருவரு ளைப்பூசை செய்தவர் பாண்டியன் மண்டலமே.
|
(74) |
|
|
|
|
|
|
|
தேகம் செழித்திடு மென்றே தெளிந்து சிவமயமாய்
மேகம் நிறங்கொளும் போதங்கு மேவிடில் மீனுமுண்டாய்க்
காகம் படர்ந்து கருத்து மதிசயங் காட்டுமலர்
வாசம் பொருந்துபொற் றாமரை பாண்டியன் மண்டலமே.
|
(75) |
|
|
|
|
|
|
|
தேனேறு மின்சொ லிராமா யணத்தில் திருவழுந்தூ
ரானே றனைய தமிழ்க்கம்ப நாட னமைத்துவைத்த
தானேரில் கீர்த்திசெய் வெண்ணெய்நல் லூரிற் சடையனென்னும்
வானேறு சீர்த்திகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே.
|
(76) |
|
|
|
|
|
|
|
திருந்திய சீவில்லி புத்தூரில் ஞானத்
திருவுருவாய்ப்
பொருந்துசொக் கேச ரதிகார மாய்வைத்துப் பூசைசெய்தே
யருந்தவ ராகித் தரும புரத்தி லருள்புரிய
வருந்திரு ஞானசம் பந்தரும் பாண்டியன் மண்டலமே.
|
(77) |
|
|
|
|
|
|
|
தேனிமிர் காழித் திருஞான சம்பந்தர்
தென்னவன்றன்
கூனிமி ரச்செய்து குண்டர்தந் தொண்டரைக் கூர்ங்கழுவில்
தானிடும் நீறும் விளங்க மதுரைத் தனிலிழைத்து
மானிடும் பேறு பெறவாழும் பாண்டியன் மண்டலமே.
|
(78) |
|
|
|
|
|
|
|
செய்கொண்ட பங்கயம் போலே முகமும் திருவிழியும்
கைகொண்ட வாழியுஞ் சங்கமு மேந்திக் கருடன்மிசை
மெய்கொண்ட மேக நிறங்கொண்ட மாயனு மேவியசீ
வைகுண்ட பூமியைக் காட்டிடும் பாண்டியன் மண்டலமே.
|
(79) |
|
|
|
|
|
|
|
தென்னாடு முத்துடைத் தென்னு மிதுவன்றிச்
சேரனுடை
நன்னாடு கல்லென்னும் வல்லிரும் பாகுமுன் னாடென்றுதான்
சொன்னா வலர்புகழ் சோழன்மு னேநின்று சொல்லவுயர்
மன்னாளு நாடது வன்றோதென் பாண்டியன் மண்டலமே.
|
(80) |
|
|
|
|
|
|