தூண் உத்திர இயல்பு கூறியது 100. | அறிஞர் தம்பிரான் அபயன் வாரணம் | | அரசர் மண்டலத் தரண றப்பறித்து எறித ரும்பெருங் கணைம ரங்கள்கொண்டு எழுது தூணொடு உத்திர மியற்றியே. | (பொ-நி.) வாரணம் பறித்து எறிதரும் கணைமரங்கள் கொண்டு தூணொடு உத்திரம் இயற்றி; (எ-று.) (வி-ம்.) பிரான் - தலைவன். வாரணம் - யானை. அரண்- காவற்காடு. கணைமரம்-கோட்டை வாயிற்கதவின் குறுக்கே இடும் மரம். எழுதுதூண் -பதித்த தூண். (4) |