நாசிகை இயல்பு கூறியது 102. | மீளி மாவுகைத்து அபயன் முன்னொர்நாள் | | விருத ராசரைப் பொருது கொண்டபோர் ஆளி வாரணங் கேழல் சீயமென்று அவைநி ரைத்துநா சிகையி ருத்தியே. | (பொ-நி.) அபயன், உகைத்து, பொருது, கொண்ட அவை நிரைத்து நாசிகை இருத்தி; (எ-று.) (வி-ம்.) மீளி வலிமை: மா-யானை. விருது-வெற்றிச் சின்னம். ஆளி -யாளி. வாரணம்-யானை. கேழல்- பன்றி. சீயம் - சிங்கம். இவை எழுதிய கொடிகள் என்க. நிரைத்து-வரிசையாக வைத்து. நாசிகை-கூடல்வாய். (6) |